வாரிசு தலைவர் கொடுத்த வாரிசு.. பரிதவிக்கும் இளம் நடிகை

Gossip : இளம் நடிகை சினிமாவுக்கு வந்து சில வருடங்கள் தான் ஆகிறது. அவரின் அழகு மற்றும் நடிப்பு திறமைக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் வாரிசு தலைவரின் கண்ணில் நடிகை பட்டிருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி ஒரு கட்டத்தில் எல்லை மீறி நடந்துள்ளனர். இதனால் வாரிசு தலைவரின் வாரிசு இளம் நடிகையின் வயிற்றில் உருவானது. இதை அறிந்த தலைவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்.

மேலும் தலைவர் பெரிய இடம் என்பதால் அங்கிருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் இளம் நடிகை தனது கருவை கலைத்து விட்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார். இந்த விஷயம் எப்படியோ காற்று வாக்கில் பரவி விட்டது.

இதை அறிந்த மற்றொரு டீம் இப்போது அந்த அரசியல் வாரிசுக்கு எதிராக அஸ்திரத்தை ஏவ தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தை வைத்து அவரை இருக்கிற இடம் தெரியாமல் செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி இருக்கின்றனர்.

இதனால் இப்போது வாரிசு நடிகர் படாத பாடு பட்டு வருகிறார். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு மனவேதனையில் இருக்கிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

இவர்களது சண்டையில் இளம் நடிகையின் பெயரும் இப்போது வெளியே வந்துவிட்டதால் கவலையில் இருக்கிறார். இந்த விஷயத்தை பேசாமல் விட்டிருந்தால் சினிமாவிலாவது நடிகைக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது இதனால் பட வாய்ப்பு தர தயாரிப்பாளர்கள் மறுக்கிறார்களாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment