திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கவுண்டமணி, செந்தில் சேர்ந்து நடித்த முதல் படம்.. கரகாட்டக்காரனுக்கு முன்னரே பட்டையை கிளப்பிய காமெடி

இன்று வரை தமிழ் சினிமாவில் அடிச்சுக்கவே முடியாத காமெடி கூட்டணி என்றால் அது கவுண்டமணி, செந்தில் தான். இவர்களை ரோல் மாடலாக வைத்து பலர் அவர்களைப் போல காமெடி செய்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காமெடியை அடித்துக் கொள்ள இன்றுவரை எந்த கொம்பனும் வரவில்லை.

இவர்கள் கூட்டணியில் எண்ணற்ற படங்கள் வெளியாகி உள்ளது. பெரும்பான்மையான படங்களில் கவுண்டமணிக்கு அதிக முக்கியத்துவமும் அவருக்கு கீழே உள்ளது போல செந்தில் கதாபாத்திரமும் இருக்கும். இதற்காக ஒரு போதும் செந்தில் கவலைப்பட்டதே இல்லையாம்.

Also Read : கவுண்டமணியால் அனைத்தையும் தொலைத்த நடிகை.. இன்று வரை வாய்ப்பு கிடைக்காத அவலம்.!

படத்தில் தங்களது காமெடியை பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்தால் மட்டுமே போதும் என்பது தான் இவர்களது நிலைப்பாடு. செந்தில், கவுண்டமணி காமெடி என்று சொன்னால் நமக்கு உடனே ஞாபகம் வருவது கரகாட்டக்காரன் படம் தான். இந்த படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி இன்றளவும் தொலைக்காட்சியில் போட்டால் விழுந்து விழுந்து சிரிக்கும் ஆட்கள் உண்டு.

இதை தொடர்ந்து இவர்கள் எண்ணற்ற படங்களில் நடித்தாலும் முதல் முதலாக கவுண்டமணி, செந்தில் கூட்டணி சங்கமித்த படம் என்றால் அது விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படம் தான். இந்த படத்தில் கவுண்டமணி ஆல் இன் ஆல் அழகுராஜா என்று லைட் கடை வைத்திருப்பவராக நடித்திருந்தார்.

Also Read : கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு.. ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம்

அவர் கடையில் வேலை பார்க்கும் பையனாக கவுண்டமணி கோமுட்டி தலையன் என்ற கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா, கல்லக் கண்டா அவன காணோம் அவன கண்டா கல்லக் காணோம் என்ற வசனத்திற்கு திரையரங்குகளில் கைத்தட்டல் பறந்தது.

இந்த படத்தில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் இவர்கள் கூட்டணி போட ஆரம்பித்தனர். மேலும் கவுண்டமணி, செந்தில் நடித்தால் அந்த படம் 90% வெற்றி என்று ஒரு காலத்தில் பேசப்பட்டது. அந்த அளவுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ளனர்.

Also Read : யாராக இருந்தாலும் அசிங்கப்படுத்தும் கவுண்டமணி.. படப்பிடிப்பில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட இயக்குனர்.!

Trending News