திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாராக இருந்தாலும் அசிங்கப்படுத்தும் கவுண்டமணி.. படப்பிடிப்பில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட இயக்குனர்.!

கவுண்டமணியின் நகைச்சுவை இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைவு காரணமாக படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்த கவுண்டமணி மீண்டும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். அதாவது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கவுண்டமணி எப்போதுமே நக்கல், நையாண்டியுடன் பேசக்கூடியவர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இவருடைய சுபாவமே அப்படிதான். சிலர் இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும் ஒரு சிலருக்கு இது மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும்.

Also Read : ரஜினி, கவுண்டமணி கூட்டணியில் செம்ம லூட்டி அடித்த 6 படங்கள்.. பத்த வச்சுட்டியே பரட்ட!

அவ்வாறு கவுண்டமணி நக்கல் அடித்ததால் ஒரு இயக்குனர் கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளார். ஒரு காலத்தில் கவுண்டமணிக்கு நிறைய படங்கள் கொடுத்தவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். இவர் பல படங்களில் காமெடி நடிகராகவும் அசத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆர் சுந்தர்ராஜனின் முழங்கால் ஒரு மாதிரி வளைந்து இருக்கும். இதனால் நண்டு காளான் போறான் பாரு என கவுண்டமணி கிண்டலடித்து பேசி உள்ளார். இதனால் கோபமடைந்த சுந்தர்ராஜன் கவுண்டமணியை வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளாராம்.

Also Read : செந்தில், கவுண்டமணி என்றாலே திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் 5 படங்கள்.. இன்று வரை மறக்க முடியாத டிக்கி லோனா

அதன் பின்பு இது மிகப்பெரிய கலவரமாக வெடித்து படப்பிடிப்பு தளத்திலேயே கட்டி புரண்டு சண்டை போடும் அளவிற்கு சென்றுள்ளது. அதன் பின்பு அருகில் உள்ளவர்கள் இவர்களை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்தி வைத்துள்ளனர்.

அன்றிலிருந்து கவுண்டமணி, சுந்தர்ராஜன் இருவரும் பேசிக் கொள்வதே இல்லையாம். ஒரு சாதாரணமான நக்கல் பேச்சால் சண்டை வரை சென்று சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கும் அளவிற்கு போய் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் கவுண்டமணியின் நக்கல் பேச்சு தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : கவுண்டமணி கூட்டணியில் வெற்றியடைந்த 5 ஹீரோக்கள்.. செந்தில் மார்க்கெட்டை இறக்கிவிட்ட சத்யராஜ்

Trending News