ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Joshua Imai Pol Kaakha Movie Review- 4 வருட தடைகளைத் தாண்டி ஜெயித்தாரா கௌதம் மேனன்.? ஜோஷ்வா இமை போல் காக்க முழு விமர்சனம்

Joshua Imai Pol Kaakha Movie Review: கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண், ராஹேய், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜோஷ்வா இமை போல் காக்க இன்று வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக ரிலீசாக போராடி வந்த இப்படம் இன்று தடைகளை தாண்டி வெளிவந்துள்ளது. இதன் விமர்சனத்தை பற்றி இங்கு காணலாம்.

வழக்கறிஞராக இருக்கும் ஹீரோயின் கடத்தல் மன்னனாக இருக்கும் வில்லனை ஜெயிலுக்கு அனுப்ப போராடுகிறார். இதனால் ஹீரோயினை கொல்ல வில்லன் முயற்சிக்கிறார். அதிலிருந்து அவரை இமைப்போல் காக்க வருகிறார் ஹீரோ வருண்.

இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? நாயகியின் நோக்கம் நிறைவேறியதா? ஹீரோவின் பின்புலம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம். காதல் படங்களுக்கு பெயர் போன கௌதம் மேனன் இப்படத்தை முழு ஆக்சன் கதையாக வடிவமைத்திருக்கிறார்.

Also read: Manjummel Boys Movie Review- குணா குகையில் சாத்தானிடம் சிக்கிய 11 பேரின் நிலைமை என்னாச்சு? ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ அனல் பறக்கும் முழு விமர்சனம்

ஆனாலும் லவ் ட்ராக்கும் படத்தில் இருக்கிறது. ஆனால் அது கனெக்ட் ஆகாமல் போனதுதான் சோகம். அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகள் தான் படம் முழுக்க நிறைந்து இருக்கிறது. ஹீரோவும் சலிக்காமல் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். இதுவே படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் மாறி இருக்கிறது.

அதேபோல் வருண் ஒரு ஹீரோவாக தன் முயற்சியை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இருந்தாலும் இன்னும் அவர் பயிற்சி எடுக்க வேண்டும். மேலும் குந்தவை என்ற கேரக்டரில் வரும் ஹீரோயினின் நடிப்பும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

Also read: Ranam Aram thavarel movie Review- காவல்துறைக்கு தண்ணி காட்டும் கொடூர மரணங்கள்.. அறம் ரணம் தவறேல் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இப்படி படத்தில் சில பலவீனங்கள் இருந்தாலும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இதற்காகவே பாடகர் கார்த்திக்கை பாராட்டலாம். பல இடங்களில் அவர் கொடுத்திருக்கும் பிஜிஎம் சிலிர்க்க வைத்துள்ளது. ஆக மொத்தம் போராட்டத்தை தாண்டி வெளிவந்திருக்கும் இப்படம் ஆக்சன் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5 / 5

Trending News