பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இலவச ஸ்கூட்டர் வழங்க அரசு முடிவெடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெண்களின் முன்னேற்றம், பெண் கல்வி என பெண்களின் உரிமைக்களுக்கான நாட்டில் குரல் கொடுத்த சாவித்ரி பாய் பூலே, ஈவே ரா பெரியார் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்தனர்.
அதன்பின் பல்வேறு தடைகளைத் தாண்டி, ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வியில் மேலோங்கி பல உயர்ந்த பதவியில் உள்ளனர். கடந்த 19, 20 ஆம் நூற்றாண்டில் பெண்ணிய இயக்கம் அனைவருக்கும் கல்வி என்றா கோட்பாடு, சம கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தன. இதனால் பெண்கள் இந்தியாவை தாண்டி வெளி நாட்டில் பல உயரிய பொறுப்பில் உள்ளனர். கடந்த கணக்கெடுப்பில், இந்தியாவில் 53.63 சதவீதம் பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றதாக தகவல் வெளியானது.
அரசின் கல்வி உதவிகள்
தற்போது நவீன உலகின் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அனைத்து துறையிலும் முன்னணியில் உள்ளனர். படிப்பில், ஆண்களைவிட அதிக மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் அளவில், தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், நடவடிக்கைககள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், சுதந்திரம் பெற்று நாடு முன்னேற்றம் அடைந்து, உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா அறியப்பட்டாலும் இன்னும் இந்தியாவின் கிராமப் புறப் பகுதிகள் உள்ளிட்ட ஒருசில இடங்களில் இன்னும் முழுமையாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர் வெகுசிரமத்துடன் பள்ளிகளுக்குச் சென்று படித்து வருவதாக நாளிதழ்களிலும் செய்திகள் வழியாக அறிகிறோம்.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்
இந்த நிலையில், மாணவிகள் கல்வி கற்க போக்குவரத்து ஒரு தடையாக இருக்க கூடாது என முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு இலவச ஸ்கூட்டி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், மாணவிகளின் சுதந்திரம், கல்வித்துறையை ஊக்குவிப்பதாகவும், வாழ்க்கையில் முன்னேற உந்துதலாக இருக்கும் வகையிலும், மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கல்வித்துறையில் ஊக்கத்தை ஏற்படுத்தவும் வேண்டி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்குச் சலுகைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வார்கள் எனவும், கல்லூரியில் சேரும்போது, இலவச ஸ்கூட்டி யோஜனா திடத்தின் கீழ் பெண்கள் விண்ணப்பிக்கலம என கூறப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நிலையில் பிளஸ் 2 ல் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு பெண்களின் கல்வி, போக்குவரத்து, வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் எல்லோரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.