கௌதம் வாசுதேவ் மேனன் சூர்யாவை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காக்க காக்க மற்றும் வாரணமாயிரம் இந்த இரண்டு படங்களுமே அவரின் கேரியரில் மறக்க முடியாத மாஸ் ஹிட் அடித்தது. அந்த காலகட்டத்தில் கௌதம் சக்ஸஸ்ஃபுல் இயக்குனராக வளம் வந்தார்.
இவருக்கென்று தனித்துவமான ஒரு ஸ்டைல் உள்ளது. வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். லவ் சப்ஜெக்ட், ஆக்சன் என எதுவாக இருந்தாலும் அதை தனித்துவமாக எடுத்து அசத்தி விடுவார்..
காக்க காக்க, வாரணமாயிரம் படத்திற்கு பின் சூர்யாவிடம் தான் முதலில் துருவ நட்சத்திரம் கதையை கூறியிருக்கிறார். அந்த படத்திற்கு சூர்யாவின் அப்பா கதாபாத்திரமாக நானா பட்டேகர் மற்றும் மோகன்லால் இருவரையும் நாடியுள்ளார். அப்பொழுது மோகன்லால் கால் சீட் கிடைத்துள்ளது..
ஆனால் சூர்யாவிற்கு இந்த படத்தின் மீது முழு நம்பிக்கை இல்லாமல் .கௌதமிடம் இந்த படம் பண்ண மறுப்பு தெரிவித்துவிட்டார். இரண்டு படங்கள் சூர்யாவை வைத்து ஹிட் கொடுத்த அவரால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன்பின் விக்ரமை வைத்து இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யாமல் இருக்கிறார்.
இருந்த போதிலும் துருவ நட்சத்திரம் படத்தை புரொடியூஸ் பண்ணியதும் கௌதம் வாசுதேவ் மேனன் தான். நஷ்டமோ லாபமோ அவரைத்தான் சேரும் என்று கூட சூர்யா யோசிக்கவில்லை. இப்படி துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நிராகரித்ததை பற்றி நீயா நானா கோபிநாத்துடன் நடந்த கலந்துரையாடலில் போட்டு உடைத்தார் கௌதம்.