சினிமாவை பொருத்தவரையில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறுவது ஒன்றும் புதிதல்ல. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பூர்ணிமா-பாக்யராஜ் இப்படி பல ஜோடிகள் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இன்று ஒரு ஜோடி இணைந்து இருக்கின்றனர்.
நடிகர் கார்த்திக்கின் வாரிசான கௌதம் கார்த்திக் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் தன் நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை இன்று பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.
Also read: திருமண தேதியை உறுதிசெய்த கௌதம் கார்த்திக்.. மஞ்சிமாவை காதலிக்க இப்படி ஒரு காரணமா?
அதிலிருந்து நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் காதலர்களாக மாறினார். இந்த விஷயம் அரசால் புரசலாக மீடியாவில் வெளிவந்தாலும் சில நாட்களுக்கு முன்பு தான் இந்த ஜோடி தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு அறிவித்தனர். அதைத்தொடர்ந்து தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல போவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
கல்யாண பூரிப்பில் மஞ்சிமா

அந்த வகையில் இவர்களுடைய திருமண அறிவிப்புக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று அவர்களுடைய திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஜோடியின் திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
Also read: திருமணத்திற்கு தேதி குறித்த ஜோடி.. காதலியை கரம் பிடிக்க போகும் கௌதம் கார்த்திக்
அதில் கௌதம் கார்த்திக் மாப்பிள்ளைக்கு உரிய தனி அழகுடன் பட்டு வேட்டி சட்டையில் இருக்கிறார். அவருக்கு மேட்ச் ஆக மஞ்சிமா மோகனும் சந்தன நிற புடவையில் கல்யாண பெண்ணாக ஜொலிக்கிறார். இவர்களுடைய இந்த திருமணம் நெருங்கிய உறவுகளுக்கு முன் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
திருமணத்தில் இணைந்த கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்

இந்த திருமணத்தில் மணிரத்தினம், கௌதம் மேனன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நீண்ட நாள் காதலில் வெற்றி பெற்றிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.
Also read: கௌதம் கார்த்திக்கை கேவலப்படுத்திய சிம்பு படக்குழு.. நம்ப வைத்து மோசம் செய்த அட்டூழியம்