வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Bodyguards-உடன் சீரியலில் என்ட்ரி கொடுத்த கமல் நாயகி.. இனி சின்னத்திரை தான் போல

80ஸ் காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் காலகட்டம் வரை பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌதமி அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி பிரபலங்களோடு நடித்த கௌதமி தமிழில் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பல ஹிட்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்

கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கும் இவர் போட்ட குத்தாட்டம் எப்போதும் இவருடைய பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானது. அதிலும் சிக்கு புக்கு ரயிலு பாட்டு பலருடைய ஃபேவரைட். ஏன் சமீபத்தில் சூர்யா கூட அதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், குணச்சித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். இருப்பினும், கடந்த 2 வருடங்களாக ஆள் அட்ரசே இல்லாமல் தான் இருந்தார். இதற்க்கு காரணம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில், சில போராட்டங்களை சந்தித்தார். குறிப்பாக நடிகர் கமலை விட்டு பிரிந்த பிறகு, எதிலும் பெரிதாக தோன்றவில்லை. ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் அவ்வப்போது, ஜட்ஜாக வருவார்.

பிரபல சீரியலில் என்ட்ரி

இந்த நிலையில் 14 வருடங்களுக்கு பிறகு, ஒரு சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை கௌதமி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே என்று சீரியலில் இவர் கதாநாயகியின் அம்மாவாக அறிமுகம் ஆகிறார். அதுவும் இவர் பெரிய ஆளாக இருப்பார் போல.. bodyguard-ஓடு தான் என்ட்ரியே கொடுத்திருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் ரீமேக் தான் இந்த நெஞ்சத்தை கிள்ளாதே. கதாநாயகியாக ரேஷ்மாவும், கதாநாயகனாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார்கள். இதில் கதாநாயகி மதுமிதாவின் அம்மாவாக கௌதமி தற்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இது இன்னும் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. காரணம் இவருக்கு நல்ல face value உண்டு. அதே நேரத்தில், இவர் வந்த பிறகு, சீரியலில் பல திருப்பங்கள் வரும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. இனி கௌதமி ரசிகர்களும் இந்த சீரியளை பார்ப்பார்கள்.

Trending News