புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வெளியேறப் போகும் ஜி பி முத்து.. அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு மற்றும் ஆர்மி

கடந்த வாரம் கோலாலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பயங்கர சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் ஜி.பி முத்துவின் வெள்ளந்தியான பேச்சும் கலாட்டாவும் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் ரொம்பவே இம்ப்ரஸ் செய்துள்ளது. அதனால் நாளுக்கு நாள் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த சீசனின் முதல் ஆர்மியும் இவருக்கு தான் தொடங்கப்பட்டது. அந்த அளவுக்கு ரசிகர்களை தன்னுடைய நடவடிக்கையால் கவர்ந்த ஜிபி முத்து தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியின் இறுதி பகுதியில் தனக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று கூறி சோர்வாக அவர் படுத்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஜி பி முத்துவுக்கு என்ன ஆச்சு, அவருக்கு குணமடைய வேண்டும் என்று கூறி வந்தனர்.

Also read:கமலுடன் போட்டி போடும் ஜி பி முத்து.. டாப் ஹீரோயின்களுக்கு போடும் ஸ்கெட்ச்

மேலும் பிக் பாஸ் வீட்டிலும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் விரைவில் குணமாகி மீண்டும் தன்னுடைய சேட்டையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இப்படி ஒரு செய்தி அவருடைய ஆர்மியினர் தலையில் இடியாக வந்து இறங்கி இருக்கிறது. அதாவது ஜி பி முத்துவுக்கு வைரல் ஃபீவர் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

இதனால் அவர் பூரண ஓய்வில் இருக்கும் பொருட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் விஜய் டிவியின் டிஆர்பியை எகிற வைத்த பெருமை ஜி பி முத்துவுக்கு உண்டு. இவருக்காக மட்டுமே நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் இருக்கின்றனர்.

Also read:ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

ஆனால் தற்போது அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் கலக்கத்தில் இருக்கின்றனர். மேலும் ஜிபி முத்து எப்படியாவது உடல்நலம் தேறி விட வேண்டும் என்ற வேண்டுதலையும் அவர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் விஜய் டிவி ஏதோ ஒரு நாடகத்தை நடத்துவதாகவும், ஜி பி முத்து இல்லையென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் புறக்கணிப்போம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஜிபி முத்துவுக்கு என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

Also read:ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து

Trending News