தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்தாலும் அதில் தனது முத்திரையைப் பதித்து சென்றார் அந்த நடிகை. முதல் படத்திலேயே துணுக்கான நடிப்பை நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.
இப்பொழுது தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கிறார். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் சில காரணங்களுக்காக அவற்றை மறுத்து விட்டார்.
பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகையின் குறும்புத்தனமான நடிப்பை பார்த்து வாய்ப்புகளை கொடுத்தாலும், சில தயாரிப்பாளர்கள் அந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்யும் விஷயத்திற்கும் அழைத்துள்ளனர்..
தமிழ் படங்களுக்கு முன்னரே மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார் நடிகை. அங்கே 4, 5 படங்கள் நடித்து விட்டு தான் இங்கே வந்துள்ளார். இங்கே வந்தவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை இருந்துள்ளது. அதனால் திரும்பவும் மலையாளம் பக்கமே சென்று விட்டார்.
முதல் படத்திலேயே திருட்டு சம்பந்தப்பட்ட கதை நாயகியாக அசத்தியவர். இரண்டாம் படத்தில் நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிளப்பினார். ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள அட்ஜஸ்ட்மெண்ட் கலாச்சாரம் அவரை ஓடச் செய்தது.
இதனால் சற்று யோசித்த நடிகை தமிழில், இரண்டு படங்கள் போதும், ஆளை விடுங்கள் என்று கம்பி நீட்டி இருக்கிறார். இப்பொழுதும் நல்ல கதைகளை தேர்வு செய்து மலையாளத்தில் நடிக்க பிளான் பண்ணிகொண்டிருகிறார்.