புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்க்கரை நோய்க்கு சங்கு ஊதும் கொய்யா இலை.. எப்படி ரெடி பண்றது? 10 நாளில் கம்மி பண்ணிடலாம் வாங்க

Diabetes Best Medicine: கோடி கோடியாய் பணத்தை சேர்த்து வச்சாலும் கடைசியில நிம்மதி இல்லாமல் மருந்து மாத்திரை என வாழ்க்கை ஓட்டும் படியாக நிலைமையில் தான் பலரும் சிக்கித் தவிக்கிறார்கள். அதில் முக்கியமான ஒரு நோயாக சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்ட நிற்பது சர்க்கரை நோயால் தான்.

இந்த ஒரு நோய் தான் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை ரத்தக் குழாய்களை சேதப்படுத்துவதால் ஸ்ட்ரோக் என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்து விடுகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வர வைக்க மகத்துவம்

அதனால் தற்போது இந்த நோயைப் பற்றி அனைவருமே தெரிந்திருப்போம். என்னதான் மருந்து மாத்திரைகள் என்று எக்கச்சக்கமாக எடுத்து வந்தாலும் இதனுடைய பாதிப்புகள் என்னவோ குறைந்தபாடாக இல்லை. அதிலும் இது கொடுக்கும் ஒரு அபாயகரமான பயம்தான் இன்னும் நம்மளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடுகிறது.

அதனால் அந்த பயத்தை எல்லாம் போக்கி சர்க்கரை நோயை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். கை வைத்தியம் எப்போதுமே காலங்காலத்துக்கும் கை கொடுக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அது போல வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சிறிய இலை பெரிய மகத்துவத்தை உண்டாக்குகிறது என்றால் அதை நாம் முயற்சி எடுத்துப் பார்க்கலாம்.

அப்படி எந்த இலைக்கு பெரிய மகத்துவம் இருக்கிறது என்றால் அது கொய்யா இலை தான். பொதுவாக பழங்களில் கொய்யாப்பழத்துக்கு எந்த அளவுக்கு மவுஸ் உண்டோ அதைவிட அந்த இலையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதை எப்படி அருந்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தினமும் ஐந்து இலையை போட்டு 2 டம்ளர் தண்ணி ஊத்தி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதில் ஒரு அரை ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு அரை டம்ளர் வத்தும் படி கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் 5 கிராம்பும் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணியை தினமும் அருந்தி வந்தால் சர்க்கரை நோய்க்கு பயப்படத் தேவையில்லை.

இதை 12 வாரங்களுக்கு குடித்து வந்தால், அதிக இன்சுலின் உற்பத்தி செய்யாமல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கிறது.

அது மட்டுமில்லாமல் வயிற்று பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சினை, சீரான ரத்த ஓட்டம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் இந்த கொய்யா இலை மிகப்பெரிய சக்தி வாய்ந்ததாக மருத்துவ பயன்களை கொண்டு இருக்கிறது. அதே மாதிரி இன்னொரு விஷயமும் தினமும் நம் பின்பற்றி வந்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைப்பட வேண்டாம். அதாவது தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையில் குறைந்த பட்சமாக 1/2 மணி நேரம் நடை பயிற்சி செய்து வந்தால் சர்க்கரை நோய் எப்போதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து பிரச்சனை வராமல் தடுக்கும்.

நோயில்லாமல் வாழ சில குறிப்புகள்

Trending News