திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

780 கோடி வாடகை பாக்கியால் கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்.. தமிழக அரசு எடுத்த அதிரடி ஆக்சன்

Guindy Race Club: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு கடந்த 1945 ஆம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் நீளம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த நிலத்தை குத்தகைக்கு விடும் பொழுது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு காலத்துக்கு ஏற்ப வாடகையை அதிகரிக்கும் விதமாக முடிவு செய்யப்பட்டு 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி முதல் இந்த வாடகை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் படி மாம்பலம் கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்து கொடுத்திருக்கிறார்கள்.

சென்னை நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு அதிரடியாக ஆக்ஷன் எடுத்த அரசு

ஆனால் இதை ஏற்க மறுப்பு தெரிவித்து ரேஸ் கிளப்பு 1945 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது தொடர்பாக எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் செல்லாது காலத்திற்கு ஏற்ப வாடகை அதிகரிக்க தான் செய்வோம்.

அதை நீங்கள் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று தீர்மானத்துடன் ரேஸ் கிளப் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு வாடகை பாக்கி தொகையாக 780 கோடியை 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் செலுத்தும் படி நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.

இந்த நோட்டீசை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் பொழுதுபோக்கிற்காக குதிரைகள் மீது பெரிய தொகையை பந்தயம் கட்டி விளையாடுவதற்காக மாநகரின் மையப் பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது இவ்வளவு இடத்தை சும்மா விடுவதால் பெருசாக யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கிளப் நிர்வாகம் உள்வாடகை விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. இதனால் இந்த நிலத்தை மீட்டெடுத்து தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பலனளிக்கும் விதமாக வளர்ச்சி திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம் என உத்தரவு விட்டு இருக்கிறது.

அது மட்டுமல்ல ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸின்படி செலுத்த வேண்டிய 780 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறும் பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் இருக்கும் 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு அந்த நிலத்தை பொது நலனுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவின் படி வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று இன்று அதற்கு சீல் வைத்திருக்கிறார்கள். இப்படி அதிரடி அக்க்ஷனை தமிழக அரசு எடுத்த நிலையில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Trending News