செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 5 படங்கள்.. அதிலும் 1356 எபிசோடு கடந்த கோபியின் நாதஸ்வரம் சீரியல்

உலகில் உள்ள பலருக்கும் ஏதாவது வித்தியாசமாக சாதனை புரிந்து கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற பல கனவுகள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தை பார்க்கும் போது,இப்படியெல்லாம் சாதனைகளை செய்ய முடியுமா என்று கேட்கும் அளவிற்கு அப்புத்தகத்தில் பல நபர்கள் சாதனைகளை அள்ளிக்குவித்திருப்பர். அந்த வகையில் சினிமாவிலும் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற திரைப்படங்கள் பல உண்டு.அதில் தென்னிந்திய திரைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல அரிய வகை சாதனைகளை செய்துள்ளது. அதில் முக்கியமான ஐந்து சாதனை சினிமாக்களை தற்போது பார்க்கலாம்.

சுயம்வரம் : 1999 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 14 இயக்குனர்களுடன் இயக்கப்பட்ட சுயம்வரம் திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருப்பர். சுயம்வரம் என்ற பெயருக்கு ஏற்றவாறு இத்திரைப்படத்தின் கதைக்களம் திருமணத்தை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் மொத்தம் நான்கு இசையமைப்பாளர்கள் உட்பட மொத்தம் 1400 தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை செய்தனர். மேலும் 24 மணி நேரத்திலேயே இத்திரைப்படத்தை எடுத்து முடித்து கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படமாக அமைந்தது.

Also Read : போனி கபூரை விட வெறியுடன் காத்திருக்கும் அஜித்.. 8 வருடங்களுக்குப் பின் நேருக்கு நேர் மோதும் சம்பவம்

நாதஸ்வரம்: மெகா தொடர் பிரியர்களின் பிடித்தமான தொடர் என்றால் சன் டீவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடர்தான். இயக்குனர் திருமுருகன் இயக்கி,நடித்த நாதஸ்வரம் மெகா தொடர் 1356 எபிசோடுகளை கடந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் சூப்பர் ஹிட் மெகா தொடராக வலம் வந்தது. இத்தொடரில் ஒரு எபிசோட் அப்படியே லைவில் ஒளிபரப்பப்பட்டு கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் சீரியல் என்ற பெயரையும் நாதஸ்வரம் மெகா தொடர் பெற்றுள்ளது.

அகடம்: இயக்குனர் முஹம்மது ஐசாக் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தென்னிந்திய சினிமாவிலேயே வெளியான முதல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. ஹாரர் திரைப்படமான உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை சென்னை போரூரில் உள்ள ஒரு பங்களாவில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

Also Read : திரையில் மட்டும் தான் வில்லன்.. ரியலில் குடிப்பழக்கமே இல்லாத, அசத்தலான 5 நடிகர்கள்

சிவப்பு மழை: இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய சிவப்பு மழை திரைப்படம் மீரா ஜாஸ்மின்,விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருப்பர். வெறும் 11 நாட்கள் 23 மணி 45 நிமிடங்களில் முழு திரைப்படமும் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் கதை எழுதுவதில் இருந்து நடிகர்கள் தேர்வு செய்வது முதல் படபடிப்பு முடியும் வரை குறுகிய நாட்களில் முடித்த படம். இந்நிலையில் வெகு விரைவில் தயாரிக்கப்பட்ட சிவப்பு மழை படத்திற்கு கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றது.

பாகுபலி: இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு பேன் இந்தியா மூவியாக ரிலீஸானது. இத்திரைப்படத்தின் புரமோஷனுக்காக கிட்டத்தட்ட 50000 அடி உயரத்திற்கு போஸ்டர் அடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவில் அதிக உயரத்திற்கு அடிக்கப்பட்ட போஸ்டராக கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பாகுபலி திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

Also Read : யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

Trending News