புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உச்சகட்ட அவமானத்தால் தற்கொலை முயற்சியில் குணசேகரன்.. டபுளா யோசிச்சு ஜனனி வச்சா பாரு ஆப்பு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஆதிரை கல்யாணத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் கரிகாலனை ஏமாற்றி ஆதிரையை கூட்டிட்டு போயிருந்தாலும் அவரை பார்க்கும் போது ரொம்பவே பாவமாக இருக்கிறது.

உண்மையை சொல்லப் போனால் அருண், ஆதிரை மேல் வைத்திருக்கும் காதலை விட கரிகாலன் காதல் ரொம்பவே உண்மையானது. அடுத்ததாக கோயிலுக்கு போனவர்களை இன்னும் காணவில்லை என்று மண்டபத்தில் ஜான்சிராணி மற்றும் குணசேகரன் ரொம்பவே கொந்தளித்திருக்கிறார்கள். இதற்கு காரணமான இவருடைய அம்மாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள்.

Also read: குணசேகரனை மிரட்டும் ஜான்சி ராணி.. கரிகாலன் காதலை ஊத்தி மூடிய ஜனனி

குணசேகரனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை எப்படியும் வந்து விடுவார்கள் என்று இருந்த நிலையில் கரிகாலன் வந்து உண்மையைச் சொன்ன பிறகு மொத்தமாகவே தோற்று விட்டோம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அனைவரது முன்னாடியும் தன்மானத்திற்கு பிரச்சனை என்றதும் தூக்குதுரை தூக்கு போடப் போய்விட்டார்.

பிறகு அங்கே இருப்பவர்கள் அனைவரும் இவரைக் காப்பாற்றி விடுகிறார்கள். அடுத்ததாக ஜான்சிராணி, குணசேகரனை பார்த்து உன்னை அண்ணன்னு கூப்பிடனுமா வேண்டாமா என்று இந்த கல்யாணத்தில் தான் தெரியப்போகிறது என்று எச்சரிக்கிறார். பாவம் இவர்களுக்கு இடையில் ஈஸ்வரி மற்றும் குணசேகரனின் அம்மா மாட்டி கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: ஆனந்த கண்ணீரில் தத்தளிக்கும் முல்லை கதிர்.. நெகிழ்ச்சியான தருணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

அடுத்ததாக ஆதிரையை கூட்டிட்டு அனைவரும் கோவிலுக்கு வந்து விடுகிறார்கள். அங்கே கல்யாண ஏற்பாடு வேலைகள் எல்லாம் பக்காவாக தயாராகிவிட்டது. மற்றபடி என்ன அருண் வந்து விட்டால் கல்யாணம் ஜோராக நடந்து விடும். ஆனால் இங்கே தான் பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது கௌதம், அருணை கூட்டிட்டு வருகின்ற வழியில் போலீஸ் மூலமாக சிக்கிக் கொள்ளப் போகிறார்.

ஏனென்றால் ஏற்கனவே கௌதமை போலீஸ் தேடிக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் இந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் சக்தி நிறைய தடவை போன் செய்தும் அவர்கள் எடுக்கவில்லை. இதனால் குணசேகரன் மட்டுமல்லாமல் ஜனனியும் ரொம்பவே பதட்டத்துடன் இருக்கிறார். ஒருவேளை ஜனனி நினைத்தபடி ஆதிரை திருமணம் நடந்து விட்டால் குணசேகரனுக்கு பெரிய ஆப்பாக இருக்கும்.

Also read: கதிர் கரிகாலன் கண்ணில் மண்ணை தூவும் ஜனனி.. முட்டாள் பீசாக இருக்கும் குணசேகரன்

Trending News