செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: கதிரை ஜெயிலுக்கு அனுப்ப ஆதாரத்தை விலை கொடுத்து வாங்கிய குணசேகரன்.. முடியப் போகும் நந்தினி அத்தியாயம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், புத்தி கெட்ட ஞானம் ஒரே பாட்டில் பணக்காரனாக ஆகிவிடலாம் என்று கரிகாலனை நம்பி மொத்தமாகவும் ஏமாந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார். அதாவது கருவாட்டுக் கடையை ஆரம்பிக்கலாம் என்று எந்த அனுபவம் இல்லாமல் கரிகாலனை நம்பி பணத்தை வாரி இறைத்தார்.

ஆனால் அவர் மொத்தத்தையும் சுருட்டி விட்டு ஞானத்திற்கு நாமம் போட்டு விட்டார். கடைசியில் போலீஸ் வந்து ஞானத்தை அரெஸ்ட் பண்ணும் போது ரேணுகா புருஷனுக்காக கெஞ்சி காலில் விழுந்து எங்களுக்கு ஒன்னும் தெரியாது விட்டு விடுங்கள் என்று கேட்டார். அத்துடன் கதிர் மற்றும் சக்தி போலீசை தனியாக கூப்பிட்டு கொஞ்சம் சமரசம் பண்ணி விட்டார்கள்.

இதனை தொடர்ந்து ஞானம், மானம் போச்சு மரியாதை போச்சு. இனிமேல் என்னால் இங்கே இருக்க முடியாது என் பெண்ணை எப்படியாவது கரை சேர்த்து விடுங்கள் என்று கதிர் கையை பிடித்து சொல்லி எங்கேயோ கிளம்ப தயாராகி விட்டார். அதற்கு ரேணுகா ஞானத்தின் கையைப் பிடித்து கன்னத்தில் பளார் என்று ஒரு அறையை போட்டு வீட்டுக்கு வா என்று கூப்பிட்டு விட்டார்.

குணசேகரன் கமுக்கமாக இருந்து ஆட போகும் ஆட்டம்

அடுத்து வழக்கம்போல் குணசேகரன் விட்டு மருமகள்கள் வாசற்படியில் இருந்து புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விசாலாட்சி அவர்களை வெறுப்பேற்றும் விதமாக உங்களால் எதையும் பண்ணி கிழிக்க முடியாது என்று நக்கல் அடிக்கிறார். இதற்கிடையில் ரேணுகாவிற்கு பணம் போய்விட்டது என்ற கவலையை விட குணசேகரன் முட்டாள் என்று புருஷனை சொல்லுவாரே என்று கவலை தான் அதிகமாக இருந்தது.

அது மட்டும் இல்லாமல் அவர் முன்னாடி இனிமேல் எப்படி தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்று அவமானத்துடனே பேசி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார். ஏற்கனவே குணசேகரன் எப்பொழுது தம்பிகள் விழுவார்கள் அதன் மூலம் நிம்மதி அடையலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஞானத்தின் புது கடையில் நடந்த கூத்து அனைத்தையும் குணசேகரன் பார்த்து விட்டார்.

இனி இதை வைத்தே அனைவரையும் தாக்கி பேசுவார். அடுத்து ஈஸ்வரி, குணசேகரன் விட்டு பிரிய போவதாக எடுத்த முடிவுக்கு அஸ்திவாரம் போடும் வகையில் குணசேகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப் போகிறார். ஆனால் இதற்கும் ஏதாவது குணசேகரன் பிரச்சனை பண்ணாமல் விடமாட்டார். அது மட்டுமில்லாமல் இந்த வீட்டிலிருந்து பெண்கள் சாதிக்க நினைத்தால் கடைசிவரை அடுப்பாங்கரைலையும் வீட்டு வாசப்படியிலும் புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் ரேணுகா மற்றும் ஞானத்தை ஒரேடியாக அடக்கி விட்டார் குணசேகரன். அடுத்து நந்தினியை ஆப் பண்ணும் விதமாக கதிர், ஜீவானந்தத்தின் மனைவி இறந்த விஷயத்திற்கு கதிர் தான் காரணம் என்கிற ஆதாரத்தை பணத்தை கொடுத்து வளவன் கிட்ட வாங்க போகிறார். இதன் மூலம் கதிரை ஜெயிலுக்கு அனுப்பி நந்தினியை முடக்கப் போகிறார். இப்படி கமுக்கமாக இருந்து குணசேகரன் ஆடும் ஆட்டத்திற்கு கடைசியில் தம்பிகள் பலிகடாக சிக்கப் போகிறார்கள்.

Trending News