Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஞானம் 15 லட்ச ரூபாய் பணத்தை கரிகாலனிடம் ஏமாந்து போனது பெரிய விஷயமாக இல்லை. ஈஸ்வரி, நந்தினி ரெண்டு கேள்வி கேட்டது தான் மிகப்பெரிய தப்பு என்கிற மாதிரி கதிர் உடைய பேச்சு ரொம்பவே மோசமாக இருந்தது. அம்பியாக இருந்த கதிர் கொஞ்ச நேரத்தில் அந்நியனாக மாறி மறுபடியும் நந்தினி இடம் எகிறி குதித்து விட்டார்.
இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு ஏற்ப கதிர் மற்றும் ஞானம் நடவடிக்கைகள் இருக்கிறது. அதாவது ஞானம் செய்த தவறுக்கு உட்கார்ந்து நீலி கண்ணீர் வடிக்கிறாரே தவிர இன்னும் மொத்தமாக திருந்தாத மாதிரி தான் அலைகிறார். அந்த வகையில் ரேணுகாவிடம் எந்தவித மன்னிப்பும் கேட்கவில்லை சமாதானமும் படுத்தாமல் சின்ன குழந்தை மாதிரி ஓவராக பண்ணுகிறார்.
நீலிக்கண்ணீர் வடிக்கும் ஞானம்
இதற்கு தான் நந்தினி நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எங்களையும் மதித்து அதன்படி செயல்படுங்கள் என்று சொல்கிறார். ஆனால் அது புரியாமல் உங்களுக்கு நாங்க என்ன அடிமையாக இருக்க வேண்டுமா. எங்களுக்கு சுய புத்தி இருக்காதா என்று வானத்துக்கும் பூமிக்கும் கதிர் குதிக்கிறார். இப்படி தான் கொஞ்ச நாளாக ஞானம் ஆட்டம் போட்டார். ஆனால் இப்பொழுது மொத்தமாக இழந்து நிற்கிறார்.
இதனை அடுத்து ஈஸ்வரி, குணசேகரன் இனி என்னுடைய கணவரை இல்லை என்று முடிவெடுத்து விவாகரத்து வாங்குவதற்கு சட்டப்படி செயல்பட்டு விட்டார். இதைப்பற்றி குணசேகரனிடம் நாம் பிரிந்து விடலாம் என்று சொல்லிய நிலையில் தர்ஷன் அம்மா என்று கூட யோசிக்காமல் ரொம்பவே மோசமாக பேசி விட்டார். உடனே ஈஸ்வரி கன்னத்தில் இரண்டு பளார் என அறைந்து விட்டார்.
ஆனாலும் திருந்தாமல் தர்ஷன் பணத்திற்காக அப்பா பின்னாடி போய் நிற்கப் போகிறார். அடுத்து ஈஸ்வரியின் லாயர் குணசேகரன் வீட்டிற்கு வந்து விவாகரத்து விஷயமாக பேசுகிறார். ஆனால் எதற்குமே அசராத குணசேகரன் வழக்கம்போல் அந்த லாயருமே அசிங்கப்படுத்தி பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி எடுத்த முடிவுக்கு நான் சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்று முட்டுக்கட்டை போடப் போகிறார்.
ஏனென்றால் குணசேகரன் பொருத்தவரை அனைவரையும் கைக்குள் வைத்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். எங்கே விவாகரத்து கொடுத்து விட்டால் ஈஸ்வரி சுதந்திரப் பறவையாக போய்விடுவார் என்ற ஒரு கெட்ட புத்தியில் குணசேகரன் விவாகரத்துக்கு நோ சொல்லப் போகிறார். ஆனால் இதற்கு பேசாம ஈஸ்வரி தனியாக போயி சொந்தக்கலில் நின்னு ஜெயிப்பதற்கு முயற்சி எடுக்கலாம்.
அந்த வகையில் இவர்களுடைய செயல்கள் எப்படி இருக்கிறது என்றால் தலைய சுத்தி மூக்கை தொடுவது போல் இருக்கிறது. அதனால் குணசேகரன் வீட்டுப் பெண்கள் இப்போதைக்கு ஜெயிப்பதாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அண்ணன் தான் நமக்கு தெய்வம் என்று ஒவ்வொருவரும் அவருக்கு பின்னாடி போய் நிற்கப் போகிறார்கள். மீண்டும் அண்ணனுக்கு அடிமையாகி முட்டாள் மாதிரி தலையாட்டப் போகிறார்கள்.
கடைசியில் கணவர்கள் சப்போர்ட் இல்லாமல் 4 பெண்களும் ஜெயித்து எதிர்நீச்சல் சீரியலின் கதையை கொண்டு வரப் போகிறார்கள்.