புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தர்ஷனை பிளாக் மெயில் பண்ண போகும் குணசேகரன்.. ஹீரோயிசம் காட்ட தில்லாலங்கடி வேலையை பார்க்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், அஞ்சனாவின் காதல் தற்போது கேள்விக்குறியாக இருப்பதால் ஜனனி இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று சித்தார்த்தை கூப்பிட்டு பேசுகிறார். சித்தார்த் வந்ததும் சக்தி, நீ காதலிச்சது உண்மை என்றால் எந்த நிலைமை வந்தாலும் அஞ்சனாவை கைவிடமாட்டேன் என்று சத்தியம் பண்ணு என்று கேட்கிறார்.

உடனே சித்தார்த் என்ன ஆனாலும் நான் அஞ்சனாவை கைவிட மாட்டேன். என்னோட கல்யாணம் அவள் கூட தான் நடக்கும் என்று சத்தியம் செய்கிறார். அந்த நேரத்தில் வந்த உமையா, என் பையனை கூப்பிட்டு வைத்து என்ன பேசுகிறீர்கள் என்று ஜனனி மற்றும் சக்தியை பார்த்து கேட்கிறார். அதற்கு ஜனனி என் தங்கச்சி கல்யாணம் பண்ண போற பையனிடம் தான் பேசுகிறோம் என்று சொல்கிறார்.

உடனே உமையா, சித்தார்த்தை மிரட்டுகிறார். அதுவரை வாய் திறந்து பேசிய சித்தார்த், அம்மாவை பார்த்ததும் எதுவுமே நடக்காத போல பேசாமல் இருப்பது கொஞ்சம் இடிக்கிறது. இப்படிப்பட்ட பையனை நம்பி எப்படி ஜனனி, அஞ்சனாவுடன் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

தர்ஷனை பிளாக் மெயில் பண்ணும் குணசேகரன்

அடுத்ததாக தர்ஷன் காலேஜ் படிக்கும் தோழிகளுடன் வெளியே சுற்றுகிறார். அப்பொழுது போலீஸ் பார்த்ததும் அவர்களை விசாரிக்கிறார்கள். அதே நேரத்தில் ஜனனி மற்றும் சக்தியும் அங்கே போய் தர்ஷன் மேல் தப்பு இல்லாத மாதிரி பேசுகிறார்கள். ஆனால் போலீஸ் எதுவுமே நம்புவதாக தெரியவில்லை.

உடனே தர்ஷன் அவருடைய அப்பா குணசேகரன் பெயரை சொல்லிவிட்டார். இதை கேட்ட போலீஸ் குணசேகரனுக்கு போன் பண்ணி ஒரு பையனை விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால் அவன் உங்க பையன் என்று இங்கே நிற்கிறான் என சொல்கிறார்.

இதை கேட்ட குணசேகரன் எனது என் பையனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் அங்கே வருகிறேன் என்று வருகிறார். குணசேகரன் வந்ததும் நீ தான் என் பையனே இல்லை என்று சொல்லிட்டு போனவன் தானே. இப்ப மட்டும் அப்பான்னு எந்த உரிமையில் என் பெயரை பயன்படுத்துகிறாய் என்று கொஞ்சம் தெனாவட்டாக பேசுகிறார்.

இதுதான் சான்ஸ் என்று தர்ஷனை கொஞ்சம் பிரைன் வாஷ் பண்ணுகிறார். அத்துடன் நான் வேண்டாம் என்று இவர்கள் பின்னாடி சுற்றினால் என்ன கெதியாகும் என்று யோசித்துப் பாரு என பிளாக் மெயில் பண்ணி பணத்தின் அருமையை பற்றி மட்டமாக பேசுகிறார்.

இப்படி கதைகள் ஒவ்வொன்றும் திசை மாறிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு எதுவுமே தீர்வு காண முடியாத அளவிற்கு எல்லா பிரச்சனையும் ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் சரியாகும் என்று ஒரு கதை உருவாகிறது.

அதனாலயே ஜீவானந்தம் ஹீரோயிசம் காட்டுவதற்காகவே பல தில்லாலங்கடி வேலைகளுக்கான காட்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜீவானந்தம் வந்ததும் ஒவ்வொரு பிரச்சனையாக சரி செய்ய போகிறார்.

Trending News