புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தர்ஷினியை வைத்து சித்தார்த்தை பிடிக்கப் போகும் குணசேகரன்.. அஞ்சனா கல்யாணத்தில் ஏற்பட போகும் ட்விஸ்ட்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் சித்தார்த்தை காணவில்லை என்றதும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் கதிர் மற்றும் சக்தியை போலீஸ் அரெஸ்ட் பண்ணி விட்டால் சித்தார்த் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் போலீஸ் கண்ணில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சக்தி மற்றும் கதிர் தலைமறைவாக சித்தார்த்துடன் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரனின் உண்மையான சுய ரூபத்தை கண்டுபிடிக்க குற்றவை மூலம் ஈஸ்வரி போராடி வருகிறார்.

ஆனால் அதற்குள் தர்ஷினியை கூட்டிட்டு குணசேகரன் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு திரும்பி வந்த ஈஸ்வரி, தர்ஷினியை காணும் என்று தேடுகிறார். இதையெல்லாம் பார்த்து ஒன்னும் பண்ண முடியாமல் குணசேகரனின் அம்மா விசாலாட்சி வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சித்தார்த்துக்கும் அஞ்சனாக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க கதிர் அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணுகிறார். ஆனால் குணசேகரன், தர்ஷினியை வைத்து வேறு ஏதோ ஒரு புது பிளானை போட போகிறார். அதன் மூலம் சித்தார்த்தை கண்டுபிடித்து விடலாம் என ராமசாமிக்கும் தர்ஷினிக்கும் கல்யாணம் என்கிற மாதிரி ஒரு புரளியை கிளப்ப போகிறார்.

குணசேகரனின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட போகும் மருமகள்கள்

ஆனால் இந்த முறை குணசேகரன் என்ன அராஜகம் பண்ணினாலும் ஜெயிக்கப் போகிறது ஜனனி டீமாகத்தான் இருக்கப் போகிறது. தர்ஷினிக்கு அனைத்து ஞாபகங்களும் வந்துவிட்டது. ஆனால் எதுவுமே தெரியாதபோல் குணசேகரன் கூடவே இருந்து எல்லா சதித்திட்டங்களையும் முறியடிக்க போகிறார்.

அத்துடன் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவும் வரப்போகிறார்கள். இவர்கள் வந்ததும் குணசேகரன் அப்பத்தாவை கொலை முயற்சி செய்த விஷயத்திற்கும் தர்ஷினியை கடத்திட்டு போனது குணசேகரன் தான் என்கிற உண்மையையும் ஜீவானந்தம் மூலம் வெளிவரப்போகிறது.

ஆகமொத்தத்தில் குணசேகரன் மொத்தமாக தோற்றுப் போய் நிற்கப் போகிறார். இதற்கு பிறகு தான் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு விடிவு காலமாக வாழ்க்கை பிரகாசமாக அமையப் போகிறது.

Trending News