Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இந்த முறை தான் குணசேகரனை தோற்கடித்து வெற்றி வாகையை அந்த வீட்டுப் பெண்கள் சூடி இருக்கிறார்கள். அதுவும் இந்த முறை குணசேகருக்கு விழுந்த அடி மரண அடி. எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு அவமானத்தில் கூனி குறுகிப் போய்விட்டார்.
அத்துடன் வெற்றியை ருசித்த குணசேகரன் வீட்டு மருமகள்கள் இனி இதுதான் எங்களுடைய சுதந்திரம் என்று அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் போகும்போது சும்மா விடக்கூடாது என்பதற்காக குணசேகரனை டார் டாராக கிழித்து தொங்கவிட்டுவிட்டார்.
இத்தனை நாளாக ஈஸ்வரி மனதிற்குள் அடக்கி வைத்த கோபத்தை கொட்டி தீர்க்கும் வகையில் குணசேகரனை எதிர்த்து பேசி விட்டார். இப்போ தனியாக நிற்கிற மாதிரி கடைசி வரை யாருமே இல்லாமல் தனியாகத்தான் நீங்கள் நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
கெத்தாக இறங்கிய மருமகள்கள்
இதனை தொடர்ந்து குணசேகரனை ஜெயித்த சந்தோசத்தில் வீட்டிற்கு மருமகளாக வந்த நான்கு மருமகள் சுதந்திரப் பறவைகளாக வாடி வாசலை தாண்டி ஜெயிக்கப் புறப்பட்டு விட்டார்கள். ஆனால் குணசேகரன் தோற்றுப் போன வெறியுடன் அவர்களை காலி பண்ண வேண்டும் என்று அடிபட்ட பாம்பாக படை எடுக்கப் போகிறார்.
ஆனால் இனிமேல் யார் என்ன பண்ணாலும் ஒன்னும் பண்ண முடியாது அளவிற்கு திமிரு காளையுமாக குணசேகரனை மோதுவதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் இனி நந்தினி ஆசைப்பட்ட மாதிரி கேண்டீன் வைக்கப் போகிறார். ரேணுகா பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்க போகிறார்.
அத்துடன் ஈஸ்வரி கல்லூரியில் வேலை பார்க்கப் போகிறார். மேலும் ஜனனி பிசினஸ் பண்ணி தொழிலதிபராக மாறப் போகிறார். இவர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவப் போவது கதிர், சக்தி மற்றும் ஞானம்.
இதற்கு இடையில் இவ்வளவு நாள் எங்கே இருந்தார் என்று தெரியாத ஜீவானந்தம் திடீரென்று தர்ஷினியை கூட்டிட்டு போயி கனவை நிறைவேற்ற முயற்சி எடுத்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இனி குணசேகரன் வீட்டுப் பெண்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்க போகிறது.