புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

Ethir Neechal Serial: இதுவரை எந்த ஒரு தொடருக்கும் கிடைக்காத அளவுக்கு எதிர்நீச்சல் தொடருக்கு மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். இதற்கு காரணம் எதிர்நீச்சல் தொடரின் வில்லன் ஆதி குணசேகரன் தான். அதாவது வில்லத்தனத்திலும் நம்மை சிரிக்க வைத்து திக்கு முக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில் சொத்து பிரச்சனைகள் நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் குணசேகரன் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த நேரத்திலும் ஆதிரையின் கணவர் கரிகாலனின் அட்ராசிட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் குணசேகரனை பார்க்க அவரது மனைவி ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி ஆகியோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

Also Read : விஜய்யுடன் நடிக்க மறுத்த 3 ஹீரோக்கள்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்

ஆனால் அவர்களை உள்ளே அனுப்பாமல் கதிர் பிரச்சனை செய்கிறார். ஒருவழியாக நர்ஸ் வந்து இங்கே சத்தம் போடக்கூடாது என்று கதிரை வெளியே அனுப்பி விடுகிறார். அதன் பிறகு சக்தியை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு ஈஸ்வரி, நந்தினி, ஜனனி மூவரும் ஜீவானந்தத்திடம் நியாயத்தை கேட்க வேண்டும் என்று புறப்படுகிறார்கள்.

இந்நிலையில் ஆதி குணசேகரனுக்கு ஒரு கை மற்றும் கால் விளங்காமல் போய்விடுகிறது. அவர் கண் திறந்து பார்த்தவுடன் எனக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய ஒரு கால் மட்டும் கை அசைக்க முடியவில்லை என்று கூறுகிறார். அதற்கு கரிகாலன் இன்னும் இரண்டு வாரங்கள் அப்படிதான் இருக்கும் என்ற சமாதானம் கூறுகிறார்.

Also Read : வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

ஆனாலும் தனக்கு இருக்கும் பிரச்சினையை புரிந்து கொண்ட குணசேகரன் இனிமேல் நான் எப்படி சாப்பிடுவேன், என்னை எல்லோரும் ஒத்த கை குணசேகரன் என்று தானே கூப்பிடுவார்கள் என அழுகிறார். வில்லன் இவ்வாறு வேதனைப்படுவதை பார்க்கும் போது ரசிகர்களையே பீல் பண்ண வைத்து விட்டார் ஆதி குணசேகரன்.

மேலும் ஜீவானந்தை சந்திக்க வேண்டும் என்றால் கௌதமிடம் பேசி தான் சம்மதம் வாங்க முடியும். ஆனால் ஜனனி கௌதமிடம் பேச முடியாது என மறுக்கும் நிலையில் ஈஸ்வரி தான் பேசுகிறேன் என்று கூறுகிறார். அதன் பிறகு ஜீவானந்தத்தை இவர்கள் சந்திக்கும் போது என்ன பிரச்சனை வெடிக்க போகிறது என்று எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read : வாயில ஈ போவது கூட தெரியாமல் அண்ணாந்து பார்த்து கோபி.. பொளந்து கட்டிய பாக்யா

Trending News