புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரன் நிஜத்திலும் குண்டக்க மண்டக்க ஆளுதான்.. மகளை கல்யாணம் பண்ணிய கிடாரி

Ethirneechal Gunasekaran: சீரியல்கள் என்றால் இல்லத்தரசிகள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டத்தை மாற்றி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் பார்க்க வைத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பும், வசனமும் மக்களை கவர்ந்தது.

முக்கியமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான் இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்தாண்டு இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் இறந்து விட்டார். பின்பு இவருடைய கதாபாத்திரத்திற்கு எழுத்தாளர் மற்றும் வில்லனாக வெள்ளித்திரையில் நடித்து வந்த வேலராமமூர்த்தி கமிட் ஆகினார்.

இவருடைய தோற்றம் கிராமத்து வில்லனாகவே பல படங்களில் வெற்றி கொடுத்தது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் வந்த பிறகு இவருடைய நடிப்பு நன்றாக இருந்தாலும் மக்களை கவர முடியாமல் போய்விட்டது.

அதற்கு காரணம் வில்லத்தனத்தை மட்டுமே வைத்து கொடூரமாக நடிப்பதால் அனைவரும் வெறுக்கும் படியாக அமைந்து விட்டது. இன்னும் சொல்ல போனால் கூடப்பிறந்த தங்கை ஆதிரை மற்றும் மகள் தர்ஷினியை வைத்து வியாபாரம் பண்ணும் அளவிற்கு கல்யாணத்தை பண்ணி முடிக்க முயற்சி எடுக்கிறார்.

திருமணத்தைப் பற்றி ஓப்பனாக பேசிய வேலராமமூர்த்தி

இப்படிப்பட்டவர் சீரியலில் மட்டும் இல்ல, நிஜத்திலும் ஒரு குண்டக்க மண்டக்க ஆளாகத்தான் இருக்கிறார். அதாவது சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வேலராமமூர்த்தி, இவருடைய திருமண பந்தத்தை பற்றி ஓபன் ஆக பேசியிருக்கிறார்.

அதாவது இவர் கல்யாணம் பண்ணியது நெருங்கிய சொந்தத்தில் தான். சொந்த மதனி மகளைத்தான் கல்யாணம் பண்ணி இருக்கிறாராம். அப்படி என்றால் இவருக்கு உறவுமுறை மகள் தான் வேண்டும். அந்த வகையில் மகளைத்தான் கல்யாணம் பண்ணி இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவங்க வழக்கப்படி அக்கா மகளை கல்யாணம் பண்ண மாட்டாங்களாம். அதற்கு பதிலாக சொந்தத்தில் மகள் முறையாக இருந்தாலும் அவர்களை கல்யாணம் பண்ணிக் கொள்வது எங்களுடைய வழக்கம் என்று கூறியிருக்கிறார்.

நிஜத்திலும் இப்படி இருப்பதினால் தான் சீரியலில் வில்லங்கத்தனமான நடிப்பை கொடுத்து கொடூரமாக நடித்து வருகிறார் என்று இவருடைய பேட்டியை பார்த்தவர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் எதற்கும் அஞ்சாத ஒரு கிடாரி ஆகவும், கொம்பேறி மூக்கனாகவும் இருக்கிறார்.

Trending News