வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

40% சொத்தில் ஆப்பு வைத்த அப்பத்தா.. ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண முடியாமல் தவிக்கும் குணசேகரன்

இப்பொழுது தான் எதிர்நீச்சல் சீரியல் ரொம்பவே விறுவிறுப்பாக கதைக்கு ஏற்ற மாதிரி கொண்டு வருகிறார்கள். அதாவது அப்பத்தாவிடம் அக்கப்போர் பண்ணி அவரிடம் இருந்து 40% சொத்தை கைப்பற்றிய பிறகு குணசேகரன் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தார். இதனால் அப்பத்தா மண்டபத்தில் இருந்து வெளியேறி நடு ரோட்டில் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த ஜனனி மற்றும் சக்தி அப்பத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

பின்பு டாக்டர், அப்பத்தா கோமா ஸ்டேஜ்க்கு போய் விட்டார் என்று கூறிய நிலையில் ஜனனி ரொம்பவே ஆவேசமாக அந்த ஆளால்தான் அப்பத்தாவின் இந்த நிலைமைக்கு காரணம். அவரை நான் சும்மா விடமாட்டேன் என்று பொங்கி எழுகிறார். பிறகு அப்பத்தா விஷயம் ரேணுகா நந்தினிக்கு தெரிந்ததும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து ஜனனிடம் கேட்கிறார்கள்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

பிறகு நந்தினி வீட்டிற்கு போன் பண்ணி விஷயத்தை நாம் சொல்லிவிடலாம் என்று கூற அதற்கு ஜனனி யார்கிட்டயும் ஒன்னும் சொல்ல வேண்டாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு குணசேகரன், கதிரை நமக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கிறது என்னுடன் வா என்று கூட்டிட்டு காரில் வருகிறார். அப்பொழுது கதிர் இப்ப எங்க போறோம் அதான் கையெழுத்து வாங்கிட்டீங்களா எல்லாம் முடிஞ்சிடுச்சு என்று கேட்க அதற்கு குணசேகரன் இன்னும் முடியலை இனிமேல் தான் ஆரம்பமே இருக்கிறது என்று கூறுகிறார்.

பிறகு குணசேகரன், கதிர் மற்றும் ஆடிட்டர் இவர்கள் அனைவரும் காரில் இறங்கி மருத்துவமனைக்கு செல்கிறார்கள். கண்டிப்பாக இங்குதான் குணசேகரன் உடைய தில்லு முல்லு வேலையே ஆரம்பிக்கப் போகிறார். அதாவது கதிர் போதையில் இருந்த பொழுது தான் இவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக மண்டபத்தில் அனைவரும் கையெழுத்து வாங்கினார்கள். அதனால் அந்த கையெழுத்து செல்லாது என்று நிரூபிக்க போகிறார் குணசேகரன்.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

ஏனென்றால் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதிரையை, எஸ் கே ஆர் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க விருப்பமே இல்லை. ஆனால் அப்பத்தாவிடம் இருந்து அந்த 40% வாங்குவதற்காக தான் இவ்வளவு வேலையும் செய்து இருக்கிறார். இப்பொழுது அவர் எதிர்பார்த்தபடி அப்பத்தாவின் சொத்து இவருக்கு கிடைத்துவிட்டது. அதே மாதிரி கதிருடைய சொத்தையும் எஸ்கேஆர் குடும்பத்திற்கு போகாதபடி செய்து விட்டு விட்டால் அந்த அரசு திருமணத்தை நிறுத்தி விடுவார். அதனால் குணசேகரன் நினைத்தபடி ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார்.

இதனை அடுத்து தான் அந்த வீட்டின் மருமகள்களும் ஜனனியும் சேர்ந்து குணசேகரனுக்கு மண்டையில் உரைக்கிற மாதிரி ஒவ்வொரு விஷயங்களையும் செய்து காட்டி அவரை தோற்கடிக்க போகிறார்கள். அதுக்கு தான் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் கல்யாண சவால் என்ற பெயரில் ஜனனி நடத்தும் ஆதிரை திருமணம் மற்றும் குணசேகரன் நினைக்கும் மாப்பிள்ளையோட ஆதிரை திருமணம். இதில் யார் யாரை தோற்கடிக்க போகிறார்கள் என்பது நமக்கே தெரியும். கண்டிப்பாக ஜனனி அப்பத்தா நினைத்தபடி எல்லாமே நன்றாகவே நடக்கும்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்
.

Trending News