திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒட்டு மொத்த குடும்பத்தையும் லாக் செய்யும் குணசேகரன்.. அருண் கதை இதோடு முடிஞ்சது போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது என்னதான் போராக இருந்தாலும் ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு காரணம் இந்த சீரியலில் உள்ள கதாபாத்திரங்கள். தற்போது ஆதிரையின் திருமணத்தை வைத்து குணசேகரனுக்கும், ஜனனிக்கும் இடையே யுத்தம் நடக்கிறது.

என்னதான் வெளியில் குணசேகரன் கெத்து குறையாமல் இருந்தாலும் அவருடைய அடி மனதில் இந்த வீட்டின் மருமகள்கள் மேல் பயம் இருக்க தான் செய்கிறது. அதிலும் ஜனனி ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சனை கொண்டு வரப் போகிறார் என்று பதட்டத்துடன் தான் இருக்கிறார். அதாவது பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் சொல்வாங்க அது போல தான் குணசேகரன்.

Also read: ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.. சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் ஒட்டு மொத்த குடும்பம்

அந்த பயத்தின் வெளிப்பாடாகத்தான் ஆதிரை கல்யாணத்தில் இந்த வீட்டின் பெண்களால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குடும்பத்தின் அனைவரும் முன்னாடியும் சத்தியம் பண்ண சொல்கிறார். இதற்கு ரேணுகா சத்தியம் நாங்க எதுக்கு பண்ணனும் என்று கேட்கிறார். இதுவரை அமைதியாக இருந்த இவர் இந்த அளவுக்கு பேசுவதை பார்க்கும் பொழுது நமக்கு சந்தோசமாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் குணசேகரன் என்னதான் பித்தலாட்டம் வேலை பண்ணாலும் கடைசியில் தோற்று நிக்க போறது இவராகத்தான் இருப்பார். ஆனால் இதற்கிடையில் ஒன்று தோன்றுகிறது இந்த ஆதிரைக்கு பொருத்தமானவர் உண்மையில் கரிகாலன் தான். இவருடைய காமெடியையும். பேச்சையும் கூட பார்த்து ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

Also read: கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு சென்ற கதிர்.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அடுத்ததாக ஜான்சிராணி குலதெய்வம் கோயிலில் பூஜை முடித்த பிறகு கரிகாலனை வளைத்து வளைத்து அவருடைய நண்பர் போட்டோ எடுக்கிறார். பின்பு கரிகாலன் அவருடைய போனை வாங்கி ஒவ்வொரு போட்டவாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இவரின் நண்பர் ஏற்கனவே அருண் கௌதம் பேசிக் கொண்டிருப்பதை எதேர்ச்சியாக எடுத்த போட்டோவையும் கரிகாலன் பார்க்கும் படியாக அமைகிறது.

உடனே கரிகலன், அருண் என்று போட்டோவை பார்த்து சொல்ல அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஷாக்காகி விடுகிறார்கள். இதை எப்படித்தான் ஜனனி சமாளித்தாலும் கண்டிப்பாக கதிருக்கு சந்தேகம் உண்டாகும். இதை குணசேகரனிடம் சொல்லி ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தி அவர்களை தேடும்படியாக வரும். இனி அருண் கெதி என்னவாக இருக்கும் பரபரப்பாக வரும் எபிசோடுகள்.

Also read: இவ மானங்கெட்ட கேள்வி கேட்டாலும் கோபமே வர மாட்டேங்குது.. குணசேகரன் பம்மும் ஒரே ஆன்ட்டி

Trending News