Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தோற்றுப்போன குணசேகரன் மூஞ்சியை பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. என்ன ஆட்டம், ஓவர் பேச்சு ஆணவத்தில் தலைகால் புரியாமல் ஆடுன குணசேகரன் ஒட்டுமொத்தமாக தோற்றுப் போய் நின்று விட்டார்.
அதுவும் பெண்களை மட்டமாக நினைத்து அவர்கள் ஒன்னுக்கும் லாயக்கில்லாத மாதிரி நடத்திய குணசேகரனுக்கு விழுந்த முதல் அடி. போலீஸ் போனாலும் நாங்கள் இருக்கும் வரை தர்ஷினிக்கு எந்தவித தப்பான விஷயங்களையும் நடத்த விடமாட்டோம் என்று ஆவேசமாக களத்தில் இறங்கி விட்டார்கள் குணசேகரன் வீட்டுப் பெண்கள்.
அந்த வகையில் மண்டபத்திற்குள் நுழைந்து கையில் உருட்டு கட்டை எடுத்துக்கொண்டு ராமசாமி கிருஷ்ணசாமி அனைவரையும் அடித்தது. இன்னும் குணசேகரன் கூட ரெண்டு அடி அடித்து இருக்கலாம் அந்த அளவிற்கு தூள் கிளப்பி விட்டார்கள்.
முதல் முறையாக ஜெயித்த ஜனனி டீம்
இப்படி இவர்களுடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் பொழுது கமுக்கமாக அஞ்சனா அம்மாவை கூட்டிட்டு மணமேடைக்கு வந்துவிட்டார். அப்பொழுது அஞ்சனாவை பார்த்த சந்தோசத்தில் சித்தார்த் பல்லை காட்டி தாலியை கட்டி விட்டார். பிறகு இதை பார்த்த நந்தினி அனைவரிடமும் அங்கே பாருங்கள் என்று சொல்லிய நிலையில் ஒன்றாக அனைவரும் சேர்ந்து மணமேடை மேலே பார்க்கிறார்கள்.
பார்த்து அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக அஞ்சனா மற்றும் சித்தார்த்துக்கு கல்யாணம் ஆகிவிட்டது. பிறகு உமையாள் சித்தார்த்தை அடிக்க போக அதை அஞ்சனா தடுத்து விடுகிறார். உடனே அஞ்சனா தாலியை பறிக்கப் போகும்போது சித்தார்த் அம்மாவை எதிர்த்து பேசி இப்பொழுது அவள் என்னுடைய மனைவி.
அவளுக்கு எல்லா பாதுகாப்பும் நான் கொடுக்க வேண்டும். இனி எங்களை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது நீங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க என்று மண்டபத்தை விட்டு அஞ்சனாவை கூட்டி சித்தார்த் கிளம்பிவிட்டார். இதற்கு இடையில் மணப்பெண்ணாக இருந்த தர்ஷினி நடந்த சண்டையில் எப்படியும் நமக்கு கல்யாணம் நடக்காது என்று மேடையை விட்டு எழுந்து போய்விட்டார்.
ஆனால் எழுந்து போன தர்ஷினி நேரடியாக ஜீவானந்தம் அப்பாவை தேடி போய்விட்டார். பிறகு ஜீவானந்தத்துடன் சேர்ந்து தர்ஷினி ஆசைப்பட்ட பாக்சிங் மேட்சில் கலந்து கொண்டு கனவை நோக்கி ஜெயிக்கப் போகிறார். அத்துடன் குணசேகரனுக்கு விழுந்த அடியாள் இன்னும் எழுந்திருக்க கொஞ்ச நாள் ஆகும். அதற்குள் ஜனனி, நந்தினி, ரேணுகா மற்றும் ஈஸ்வரி அவர்களுடைய கனவை நோக்கி பயணிக்க போகிறார்கள்.