செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அதிரடியான திருப்பங்களுடன் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வீட்டுக்கு அடங்காத பிள்ளை, ஊருக்குத்தான் அடங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப குணசேகரனுக்கு பெரும் சம்பவம் ஆனது நடந்துள்ளது. அதிலும் ஓவர் அகங்காரத்தில் இருந்து வரும் குணசேகரனையே, அரசு தனது அடியாட்களுடன் வெளுத்து வாங்கியுள்ளார்.

ஏற்கனவே குணசேகரன் மற்றும் கதிர் போட்ட ஆட்டத்தால் ஆதிராவின் காதல் விவகாரம், தற்பொழுது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இந்நிலையில் எதிரியின் குடும்பத்தை மேலும் அசிங்கப்படுத்துவதாக நினைத்து குணசேகரன் தன் வாயை கொடுத்து வாங்கி கட்டியுள்ளார்.

Also Read: குணசேகரன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய வைரல் புகைப்படம்

அதனைத் தொடர்ந்து ஞானசேகரனுக்கு தனது அண்ணனின் உண்மையான முகத்திரை கிழிந்து, சுயரூபம் தெரிந்துள்ளது. அந்த  நிலையிலும் கூட அண்ணனின் மீது உள்ள பாசத்தால் அவரைக் காப்பாற்றியுள்ளார். இவற்றையெல்லாம் கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த குணசேகரன், ஞானத்தை எப்படி எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி விட்டோமே என்று மனம் நொந்து கதிரிடம் பேசியுள்ளார்.

மேலும் அண்ணனின் மீது உள்ள பாசத்தால் மீண்டும் அவர் பக்கமே சாய்ந்து விடுவாரோ என்று நினைத்த வேளையில், மௌனத்தாலேயே தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் குணசேகரன் தான் என்ற அகங்காரத்தில் பேசியதை நினைத்து வருந்திய நிலையில், தன்னிடம் பேசுமாறு ஞானசேகரிடம் கெஞ்சிக் கூத்தாடி வருகிறார்.

Also Read: எதிர்நீச்சலின் 500-வது எபிசோட் இப்படித்தான் இருக்கும்.. கிளைமாக்ஸ் ரகசியத்தை போட்டு உடைத்து திருச்செல்வம்

இது ஒரு புறம் இருக்க ஆணவத்தின் உச்சியில் இருக்கும் குணசேகரிடம், அரசு விட்ட சவாலை ஜெயிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். ஆதிராவை பார்ப்பதற்காக நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அரசு ஆதிராவிடம் கண்டிப்பாக அருண் உடன் தான் உனக்கு திருமணம் என்று  நம்பிக்கையான வாக்கினை அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வீட்டில் ஆம்பளைகளே இல்லையா என்பது போல் வீட்டின் மருமகள் ரேணுகா, ஞானசேகரனை சரமாரியாக விளாசி உள்ளார். இந்நிலையில் மீண்டும் குணசேகரன் தனது பாசம் என்ற வேசத்தினை கொண்டு டிராமா போட ஆரம்பித்துள்ளார். ஆனால் ஞானம் நடந்ததை மறந்து தனது அண்ணனின் பாசக் குழியில் விடக்கூடாது என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

Trending News