எதிர்நீச்சல் போடும் மருமகள்களிடம் நடிப்பு ராட்சசியாக மாறிவிட்டார் விசாலாட்சி. வீட்டிற்கு வாழ வந்த பெண்கள் எல்லோரும் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தால் தான் கண்டம் கழியும் என ஜோசியர் சொன்னதிலிருந்து மாமியார் விசாலாட்சி பரிதவித்து போய் உள்ளார்.
இதனால் மருமகள்களை வீட்டிற்கு கூட்டி வர தர்ஷனை தூது அனுப்பியும் பிரயோஜனமில்லை. எப்படியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று இப்பொழுது விசாலாட்சியே களத்தில் இறங்கி விட்டார். கரிகாலனை அழைத்துக்கொண்டு மருமகளை சந்திக்க சென்றார்.
சென்ற இடத்தில் மருமகள்கள் அனைவரும் வர முடியாது என அவரை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் மன வேதனையுடன் வீட்டிற்கு சென்ற விசாலாட்சியை குணசேகரன் முதல் அனைவரும் திட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் கரிகாலன் இல்லாதவையும், பொல்லாதவையும் சொல்கிறார்
அம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்கள் என வாய்க்கு வந்தபடி கரிகாலன் வற்றி வைக்கிறார். இதனால் குணசேகரன் தரப்பு கோபம் கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, மறுபக்கம் இன்ஸ்பெக்டர் குற்றவை, பார்கவிக்கு நியாயம் கிடைக்க போராடி வருகிறார்.
தர்ஷன் செய்த அநியாயங்களை பட்டியலிட்டு அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துவிட்டார் குற்றவை. அறிவுக்கரசியிடம், தர்ஷன் பேசியது முதல் பார்கவி குடும்பத்தை அடிப்பதற்கு அடியாட்களை அனுப்பியது வரை, செய்த அநியாயங்களை எல்லாம் ஆதாரத்துடன் திரட்டி விட்டார்.
இப்படி அறிவுக்கரசி செய்ததையும், தர்ஷன் செய்ததையும் வைத்து குணசேகரனின் பரோலை கேன்சல் செய்யவும் திட்டம் போடுகிறார் குற்றவை. பழைய கேஸ்சையெல்லாம் தோண்டினால் மல்லுவேட்டி மைனர் கதிரும் இதில் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் நந்தினிடம் எச்சரிக்கிறார்.