எதிர்நீச்சல் சீரியலின் கதை தற்போது வேற ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறது. ஆதரையின் நிச்சயதார்த்தத்தில் சொத்துக்காக பல குளறுபடிகள் நடந்து அது வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு கதையை நிஜத்தில் இல்லை சீரியல்ல கூட எங்கேயும் பார்த்திருக்க மாட்டோம். அவ்வளவு படு மட்டமாக போய்க்கொண்டிருக்கிறது.
ஒரு நேரத்தில் இந்த சீரியலுக்கு இருந்த மவுசே வேற. ஆனால் தற்போது வருகிற கதையை பார்க்கும் பொழுது அதிகமாக வெறுப்படையை செய்கிறது. அதிலும் இந்த ஆதிரையின் நிச்சயதார்த்தத்தில் அரசு ஒரு பக்கம் சொத்தை கேட்டு நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு போராட்டம் செய்தார். பின்னர் அவருக்கு வேண்டிய பங்கு கிடைத்ததும் சைலன்டாகிவிட்டார்.
Also read: 6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்
அடுத்ததாக குணசேகரன், இந்த ஆதரையின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததே அப்பத்தாவின் 40% சொத்து தனக்கு வர வேண்டும் என்று நினைத்து இதற்கு ஒப்பந்தமும் போட்டார். அதன் பிறகு தான் இந்த நிச்சயதார்த்தத்தை ஒத்துக் கொண்டார். இதற்கு அப்பத்தாவும் நீ கேட்ட படி நான் தருகிறேன் ஆனால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னாடி நான் கையெழுத்து போட்டு தருவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
ஆனால் தற்போது குணசேகரன், அரசு கேட்டபடி சொத்தை நான் எழுதிக் கொடுத்துவிட்டேன் அதே மாதிரி நான் கேட்ட சொத்தும் எனக்கு வரவேண்டும். அதற்காக அப்பத்தா நீ இப்பொழுதே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு முன் ஏற்பாடாக ஆடிட்டரிடம் பத்திரத்தை ரெடி பண்ணி கொண்டு வந்து அதிலே கையெழுத்து போடுமாறு அப்பத்தாவிடம் கொடுக்கிறார்.
Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்
ஆனால் அப்பத்தா என்ன குணசேகரா செய்கிறாய் நான்தான் என்னுடைய முடிவை தெளிவா சொல்லிவிட்டேன். திருமணத்திற்கு முன்னாடி தான் எனது பங்கு தருவேன் என்று. இப்பொழுது ஏன் மறுபடியும் இதைப் பற்றி கேட்டு பிரச்சினை பண்ணுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் இப்ப என்ன அப்பத்தா கல்யாணம் தானே நடக்கணும். இந்த மேடையிலேயே இப்போ ஆதிரை அருண் கல்யாணத்தை வச்சுக்கலாம் சரி தானே உனக்கு என்று சொல்கிறார்.
இதனை கேட்டு ஷாக்கான அப்பத்தா குணசேகரனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நீ மாத்தி மாத்தி பேசினால் நான் எல்லாம் உன் இஷ்டத்துக்கு மாற முடியாது. நான் இப்போ சொத்தை தர மாட்டேன் என்று சொல்ல அதற்கு குணசேகரன் அப்படி என்றால் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறுகிறார். உடனே அப்பத்தா இது உன் கூட பிறந்த தங்கை நிச்சயதார்த்தம் நடத்துவதும் நடக்காமல் நிற்கிறதும் உன்னுடைய விருப்பம் இதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று மண்டபத்தை விட்டு கிளம்புகிறார்.
உடனே ஆதிரை குணசேகரன் இடம் தயவு செய்து வேறு எந்த பிரச்சனையும் பண்ணாத எனக்காக சம்மதம் சொல்லு என்று கெஞ்சுகிறார். அதற்கு குணசேகரன் என்கிட்ட நீ கெஞ்சாதம்மா அப்பத்தாவிடம் போய் பேசி ஒரு முடிவை சொல்லு என்று அம்மாவையும் ஆதரவையும் அனுப்புகிறார். இதற்கு இடையில் ஜனனி அப்பத்தாவிடம் இதைப் பற்றி பேசுவதற்கு போகிறார். இந்த பிரச்சனைக்கு முடிவு அப்பத்தா கையில் தான் இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக அவர் இந்த சொத்தை மருமகளின் பெயர்களில் தான் எழுதி வைத்திருப்பார். அதனால் அந்த சொத்து குணசேகரனிடம் போவதற்கு வாய்ப்பே இல்லை.
Also read: கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மீனாவின் அப்பா.. துணிந்து சவால் விட்ட தனம்