திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மானம் மரியாதை சூடு சொரணை இல்லாமல் திரியும் குணசேகரன்.. கழுவி கழுவி ஊத்திய மருமகள்கள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஜெயித்தாலும் குடும்பத்தின் முன்னாடி மானம் மரியாதை இல்லாமல் தினமும் அவமானப்பட்டு வருவதை பார்க்கவே மனதிற்கு இதமாக இருக்கிறது. என்னவெல்லாம் ஆட்டம் போட்டார், உங்க வீட்டு மருமகள்கள் வாய மூடிக்கிட்டு இருந்தாங்க என்று கொஞ்ச நெஞ்ச பேச்சா பேசினீங்க. இப்ப அப்படியே கர்மா திருப்பி உங்களை அடிக்கிறது.

எல்லாத்துக்கும் தயாராக இருங்க என்று சொல்வதற்கு ஏற்ப அந்த வீட்டில் உள்ள சிறுசு முதல் அனைவரும் திருப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் குணசேகரனுக்கு ஆரம்பம் இனிமேல் தான் இருக்குது போகப் போக அவமானம். முக்கியமாக ரேணுகா அவருடைய பொண்ணுக்கு எந்தவித அநியாயமும் நடந்து விடக்கூடாது என்று ரோசமாக எழுந்து வாய்க்கு வந்தபடி தாறுமாறாக கிழித்து குணசேகரனை தொங்க விட்டார்.

Also read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை மொத்தமாக பின்னுக்கு தள்ளிய சன் டிவி

இதெல்லாம் பார்ப்பதற்கு ஆகா ஓகோ என்று கைத்தட்டி குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும் படியாக இருந்தது. இப்பொழுது தான் ஜனனி உடைய முக்கியத்துவமே என்னவென்று புரிகிறது. அதாவது பொறுமையாக இருந்து இந்த குடும்பத்தில் என்னென்ன நடக்க வேண்டும் என்று மற்ற மருமகள் மூலம் சாதித்துக் காட்டி விட்டார்.

தற்போது ரேணுகா பேச ஆரம்பித்ததில் இருந்து நந்தினி, ஈஸ்வரி மற்றும் அனைவரும் அவருடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இனிமேலாவது அவர்களுடைய சுதந்திரத்திற்காக போராடி நினைத்ததை சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது.. அவசரமாக மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் தனம்

நேற்று ரேணுகா பேசியதற்கு குணசேகரனால் எதையுமே எதிர்த்து பேச முடியாமல் வாயடைத்துப் போய்விட்டார். அது மட்டும் அல்லாமல் ஐஸ்வர்யாவும் பெரியப்பா என்று கூட பார்க்காமல் அவருடைய முடிவை தீர்க்கமாக அனைவரது முன்னாடியும் சொன்னது ரொம்பவே நன்றாக இருந்தது. இப்படி ஒருவரை ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரனை எதிர்த்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஆக மொத்தத்தில் தற்போது குணசேகரனின் நிலைமை குடும்பத்துக்குள்ளையே மானம் மரியாதை சூடு சொரணை இல்லாமல் திரிகிற மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவுதான் கழிவி கழுவி மருமகள்கள் ஊற்றினாலும் அதை எல்லாம் ஒன்னும் இல்லை என்று துடைத்துப் போட்டுவிட்டு இன்னும் வீராப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். கூடிய விரைவில் மொத்த கொட்டத்தையும் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் அடக்கப் போகிறார்கள்.

Also read: குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

Trending News