வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மாறனால் பெருத்த அவமானத்தை சந்தித்த எதிர்நீச்சல் குணசேகரன்.. ஜீவானந்தம் பேச்சை மீறியதால் ஏற்பட்ட விபரீதம்

Ethirneechal Gunasekaran: பொதுவாக ஒரு விஷயத்தில் ஆளுக்கு ஆளு கருத்து சொல்லி நாட்டமை பண்ணினால் அந்த விஷயம் மொத்தமும் பாழாகிவிடும். அப்படித்தான் எதிர்நீச்சல் சீரியலும் பாழாகிப் போனது. அதாவது ஆரம்பத்தில் கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தி பட்டி தொட்டி எல்லாம் தெறிக்க விட்டார் இயக்குனர் திருச்செல்வம்.

ஆனால் எப்பொழுது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மறைந்தாரோ, அப்பொழுதே இந்த நாடகத்துக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது. அதாவது குணசேகரன் கதாபாத்திரம் அந்த நாடகத்திற்கு ஆணிவேராக இருந்தது. அதனால் அவருடைய கதாபாத்திரத்துக்கு எந்த மாதிரியான ஒரு ஆள் சரியாக இருக்கும் என்று ஜீவானந்தம் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்.

உண்மையை சொன்ன குணசேகரன்

இதில் மூக்கை நுழைக்கும் விதமாக சன் டிவி சேனல் இடம் இருந்து கலாநிதி மாறன் வேலராமமூர்த்தி போட சொல்லி கட்டாயப்படுத்தி விட்டார். இதை மறுப்பதற்கு முடியாமல் ஜீவானந்தம், குணசேகரன் கதாபாத்திரத்துக்கு வேலராம மூர்த்தியை நடிக்க வைத்தார். ஆனால் இவருடைய வில்லங்க தனமான பேச்சும் கொடூரமான முகமும் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் வேலராமமூர்த்தி ஒரு எழுத்தாளர் என்பதால் ஜீவானந்தம் சொன்ன கதையில் சில மாற்றங்களை வைத்து அவர் இஷ்டத்துக்கு நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் ஜீவானந்தம் பெரிய அப்செட் ஆகிய நிலையில் சன் டிவி சேனலும் வேலராமமூர்த்திக்கு சப்போர்ட் பண்ணி ஜீவானந்தத்தை டம்மி ஆகிவிட்டார்கள். இதனால் தொடர்ந்து கதை தடுமாறி போயி ஜீவானந்தம் கையை விட்டு சீரியல் வேறு ஒரு டிராக்குக்கு மாறிவிட்டது.

பிறகு எப்படியாவது தன் கிளைமாக்ஸ் மக்களுக்கு காட்டி விட வேண்டும் என்று அதை நோக்கி பயணித்து வந்த ஜீவானந்தத்திற்கு மற்றும் ஒரு நெருக்கடி கொடுத்தவர் கலாநிதி மாறன். இவர் போட்ட ஒரு மெயில் தான் ஜீவானந்தத்தை கிளைமேக்ஸ் காட்சியையும் சொதப்ப வைத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இப்படி ஒரு பக்கம் இருந்த நிலையில் கதை முடிந்த பிறகு வேலராமமூர்த்தி கொடுத்த ஒரு பேட்டியில் இந்த நாடகத்தில் நான் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் சன் டிவி சேனலிடம் இருந்து எனக்கு தொடர்ந்து போன் கால் பண்ணி கெஞ்சி கூப்பிட்டார்கள். அவர்களை நம்பி நான் நடித்து தான் மிகப்பெரிய தவறு. ஏனென்றால் என்னுடைய நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அது எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நான் மட்டும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றால் எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும். அதன் மூலம் என்னுடைய கேரியர் பெஸ்டாக அமைந்திருக்கும். இதெல்லாம் என்னை சரியாக செய்ய விடாமல் தடுத்தது கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம் தான். பணம் புகழுக்கு ஆசைப்பட்டு என்னுடைய கேரியரை தொலைத்து விட்டேன் என்று இப்பொழுது புலம்புகிறார்.

அது மட்டும் இல்லாமல் ஜீவானந்தம் சொன்னபடி மட்டும் நான் நடித்துக் கொடுத்திருந்தால் ஓரளவுக்கு இந்த சீரியலில் விபரீதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பேச்சையும் மீறி எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரே எழுத்தாளராக நான் முடிவு எடுத்ததற்கு தற்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். எது எப்படியோ ஒரு நல்ல கதையில் நடிக்க ஆத்ம திருப்தியோட போனேன். ஆனால் முடியும் தருவாயில் ஏன்டா நடித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு என்னை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டது என்று கூறியிருக்கிறார்.

கதையை அவசர அவசரமாக முடித்த ஜீவானந்தம்

Trending News