Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஞானம், நான் ஆகாயத்தில் பறக்க போகிறேன் கோடீஸ்வரனாக மாறப் போகிறேன் என்று ஓவராக அதம்பல் செய்து வருகிறார். ஆனால் ஒன்றுக்குமே லாயக்கில்லாத ஞானத்துக்கு மாமியார் மூலமாகத்தான் 15 லட்சம் ரூபாய் கிடைத்தது என்று மறந்து போய் துள்ளுகிறார்.
இதனால் கட்டின பொண்டாட்டி ரேணுகாவையும் கூடப்பிறந்த தம்பிகளையும் மதிக்காமல் ஓவர் ஆட்டம் ஆடி வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக கரிகாலுடன் கூட்டணி வைத்து மொத்தமாக சிக்கி சீரழிய போகிறார். அந்த வகையில் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கரிகாலனை ஒசத்தியாகவும் குடும்பத்தில் இருப்பவர்களை மதிக்காத அளவிற்கு ஞானத்தின் செயல்கள் இருந்தது.
ஆனாலும் ரேணுகாவை சமாதானப்படுத்தும் விதமாக ஈஸ்வரி கொஞ்சம் பொறுமையாக இரு சரிப்பட்டு வரவில்லை என்றால் நாம் இதை எடுத்து நடத்தலாம் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் ரேணுகா, கணவர் இப்படி மாறி யார் பேச்சையும் கேட்காமல் ஆடுகிறாரே என்று மனக்கவலையில் வேதனைப்பட்டு வருகிறார்.
குணசேகரன் விரித்த வலையில் சிக்கிய ஞானம்
தற்போது இவருடைய மன கஷ்டத்தை போக்கும் விதமாக குணசேகரன் செய்யும் செயல் ஞானத்தின் ஆட்டத்திற்கு முடிவு கட்டப் போகிறது. அதாவது கரிகாலன் பேச்சைக் கேட்டு ஞானம் கணக்கு இல்லாமல் பணத்தை வாரி இறைத்து கையில் இருந்த மொத்த பணத்தையும் கோட்டை விட்டுவிட்டார்.
ஆனால் குணசேகரன் ஏதோ பிளான் பண்ணி கடையை காலி பண்ண வைக்கும் விதமாக போலீஸ் மூலம் காய் நகர்த்தப் போகிறார். அதாவது இந்த இடம் ஏதாவது அனாமத்து இடமாக இருக்க வேண்டும். அல்லது யாரையோ ஏமாற்றி கரிகாலன் இந்த இடத்தை ஞானத்திற்கு வாங்கிக் கொடுத்ததாக இருக்க வேண்டும்.
இதை தெரிந்து கொண்ட குணசேகரன் மொத்தமாக இவர்கள் மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து கடையை காலி பண்ண வைத்து போட்ட பணத்தை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்கும் அளவிற்கு ஸ்கெட்ச் போட்டு விட்டார். அந்த வகையில் விளக்கேற்றும் நேரம் போலீஸ் வந்து இறங்கி இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் அந்த இடத்தில் கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள். இதைப் பற்றி கரிகாலனிடம் கேட்டாலும் அவர் கடைசியில் எனக்கு ஒன்னும் தெரியாது என்று கையை விரித்துவிட்டு மொத்த குடும்பத்திற்கும் நாமத்தை போட்டு போகப் போகிறார்.
கடைசியில் உள்ளதும் போச்சே நொள்ளை கண்ணா நிலைமையில் ஞானம் நிற்கப் போகிறார். அடுத்ததாக ரேணுகா தான் மொத்தமாக இறங்கி ஒரு வேலையை பண்ணி ஞானத்துக்கும் சேர்த்து சம்பாதிக்க போகப் போகிறார். குணசேகரன் சொன்னபடி தம்பிகளை முட்டாளாக வளர்த்ததனால் கடைசிவரை அவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் தான் முடிய போகிறது.