செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: ஜனனி சக்திக்கு இடையே பரமபதம் ஆடப்போகும் குணசேகரன்.. மகளை வைத்து ஹீரோயிசம் காட்டும் ஜீவானந்தம்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஜனனி வேலை கிடைத்தது என்று சொன்னதும் சக்தி எனக்கும் வேலை கிடைத்துவிட்டது என்று சொன்னார். ஆனால் மறுநாள் ஜனனி மட்டும் வேலைக்கு போகறது மாதிரி காட்டி சக்தி வீட்டிலேயே தஞ்சம் அடைவது போல் அமைந்துவிட்டது. ஆனாலும் ஜனனி வேலைக்கு போன ஆபீஸில் எல்லாம் மர்மமாகவே அமைந்திருக்கிறது.

முக்கியமாக ஜனனியின் மேலாளர் வித்தியாசமான கேரக்டரில் காணப்படுகிறார். அந்த வகையில் இதெல்லாம் குணசேகரனின் ஏற்பாடா கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஜனனி சக்திக்கு இடையில் ஏதாவது பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்றால் இந்த மாதிரி ஒரு வேலையை செய்தால் மட்டும் தான் சாத்தியமாகும். அதனால் ஜனனியின் பெயரை டேமேஜ் பண்ணும் அளவிற்கு ஏதோ ஆட்டம் ஆட போகிறார் குணசேகரன்.

தூணிலும் துரும்பிலும் இருக்கும் குணசேகரன்

இதனைத் தொடர்ந்து ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு போன் பண்ணி உங்களை பார்த்து ஒரு விஷயம் பேசணும் என்று கூப்பிடுகிறார். அதற்கு ஈஸ்வரி என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று பதட்டத்துடன் கேட்கிறார். ஆனால் ஒரு விஷயமும் இருக்கப்போவதில்லை. தர்ஷினையை கூட்டிட்டு போன விஷயம் வெற்றிகரமாக நடத்தி முடித்து இருப்பார் ஜீவானந்தம்.

அதாவது தர்ஷினி ஆசைப்பட்ட மாதிரி விளையாட்டில் ஜெயித்து காட்டியிருப்பார். அதற்காகத்தான் ஜீவானந்தம் ஈஸ்வரியை கூப்பிட்டு இருப்பார். அதாவது எப்பொழுதுமே ஜீவானந்தம் பொருத்தவரை எங்கே என்ன பிரச்சனை நடந்தாலும் கடைசியில் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாம் தான் இருக்க வேண்டும் என்று ஹீரோயிசம் காட்டக் கூடியவர்.

அதன்படி ஒவ்வொரு பிளானையும் போட்டு வருகிறார். ஆனால் இதில் பெண்களின் முன்னேற்றம் எங்கே இருக்கிறது என்று தான் தெரியவில்லை. அடுத்தபடியாக நந்தினி அப்பா ஏற்பாடு பண்ணின மொய் விருந்து ஃபங்ஷனில் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பதற்காக நந்தினி, கதிர், ஞானம், ரேணுகா அனைவரும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போகிறார்கள்.

ஆனால் அங்கே போனதும் பத்திரிக்கையில் குணசேகரன் பெயர் இல்லை என்றதும் அதை ஒரு பெரிய விஷயமாக நினைத்து கதிரிடம் கேட்கிறார். அதாவது உங்க குடும்பத்துக்கு மிகப்பெரிய சொத்தை குணசேகரன் தான். அவர் பெயர் போடவில்லை என்றால் நாங்கள் எல்லாம் எப்படி வருவோம் என்று அவமானப்படுத்தும் படி பேசுகிறார். இதைக் கேட்டதும் வழக்கம் போல் கதிர் கொந்தளித்துக் கோபப்பட்டு போய்விடுகிறார்.

ஆனால் இதே மாதிரி தான் எல்லா சொந்தக்காரர்களும் கேட்கப் போகிறார்கள். அப்படி என்றால் யாருமே இந்த மொய் விருந்து ஃபங்ஷனுக்கு வர மாட்டார்கள் என்பது போல் தான் தெரிகிறது. இங்கேயும் கதிர் மற்றும் நந்தினி அசிங்கப்பட்டு நிற்கப் போகிறார்கள். வழக்கம்போல் குணசேகரன் இந்த ஒரு விஷயத்தை வைத்து அவர்களை மட்டம் தட்டி ஓரமாக உட்கார வைக்கப் போகிறார்.

Trending News