வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மொத்த ஆணவத்தையும் குத்தகை எடுத்த குணசேகரன்.. கொட்டத்தை அடக்கும் ஜனனி

தினமும் ஒரு எபிசோடை கூட மிஸ் பண்ணாம பார்க்க வைக்கிற ஒரே சீரியல் எதிர்நீச்சல். யார் வேணாலும் எப்படி வேணாலும் நினைச்சுக்கோங்க நான் இப்படித்தான் என்று மொத்த ஆணவத்தையும் குத்தகை எடுத்துக்கிட்ட மாதிரி குணசேகரன் வீட்டில் ஆட்டம் போட்டுட்டு இருக்காரு. ஆனா உன் கொட்டத்தை எல்லாம் அடக்குவதற்கு நான் இருக்கேன் என்று ஜனனி கமுக்கமாக இருந்து காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.

வழக்கம்போல் குணசேகரன் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துவிட்டார். ஆதிரை திருமணத்திற்காக ஏற்பாடு செய்யும் முயற்சியில் இறங்கிவிட்டார். எல்லார் முன்னாடியும் மண்டபத்தை புக் பண்ணிட்டு மூன்றாம் தேதி, கல்யாணத்த வச்சுக்கலாம் என்று அவர் தோரணையில் சொல்ல அதைக் கேட்ட எல்லாரும் திருவிழா கூட்டத்தில் காணாமல் போனவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்காங்க.

Also read: ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்

ஆனா ஜனனி அம்மணி மட்டும், உங்களுக்கு எல்லா விஷயத்துலயும் மூக்க நுழைக்கிற அதிகாரம் கிடையாது என்று வாயைத் திறந்து பேசுகிறாள். அதற்கு நம்ம வடிகட்டின முட்டாள் கதிர், என் தங்கச்சி வாழ்க்கையை முடிவு செய்ய எல்லா அதிகாரமும் எங்ககிட்ட இருக்கு என்று பழைய பஞ்சாங்கம் போல் பேசி மூக்கு உடைஞ்சது தான் மிச்சம்.

இவன அசிங்க படுத்துவதற்கு வேற யாரும் வரவே வேண்டாம் இவங்க அம்மாவே போதும். இதுவரை வாயை மூடிக்கொண்டு இருந்த விசாலாட்சி அம்மா திடீரென்று மகள் மேல் இருந்த பாசத்தினால் கொந்தளிக்கிறார். உங்களுக்கு அம்புட்டு பாசம் இருக்க போய் தான் ஆஸ்பத்திரியில் கூடயே இருந்தீங்க என்று நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டார்.

Also read: பூமர் அங்கிளையே பொளந்து கட்டிய வில்லங்கமான பார்ட்டி.. எதிர்நீச்சலில் அண்ணனை காப்பாற்றுவாரா தம்பி?

உடனே கோணவாயன் மூஞ்சி தொங்கி போயிருச்சு. ஜனனி மேல எப்போதுமே குணசேகரனின் அடி மனதில் பெரிய பயம் இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்று நன்றாக புரிந்து வைத்திருப்பார். ஆனாலும் கொஞ்சம் கூட அடங்காம நான் புடிச்ச முயலுக்கு மூன்று காலு அப்படிங்கற மாதிரியே திரிஞ்சுக்கிட்டு இருப்பார்.

ஆனாலும் இதை கண்டுக்காத ஜனனி ஆதிரை கல்யாணத்தை பேசி முடிப்பதற்காக எஸ் கே ஆர் குடும்பத்தை வர சொல்லி இருக்கார். அவங்களும் குணசேகரன் வீட்டுக்கு வந்தா எப்படி இருக்க போகிறது, எந்த மாதிரி ஆட்டம் ஆட போறாரு என்று தெரியவில்லை. ஆனாலும் அவர் வாயை அடைப்பதற்கு நம்ம விசாலாட்சி அம்மா ரெடியா இருக்காங்க என்று மட்டும் தெரியுது.

Also read: பொறாமையில் பொங்கி எழும் கோபி.. இனி தான் பாக்கியலட்சுமி ஆட்டம் சூடு பிடிக்க போகிறது

Trending News