வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அப்பத்தாவின் சூழ்ச்சி வலையில் குணசேகரன்.. 40% ஷேருக்காக மானத்தை அடமானம் வைக்கும் கேவலம்

ஒரு தெள்ள தெளிவான கதை மற்றும் வசனங்களுடன் மக்கள் மனதில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய நாடகம் என்றால் அது எதிர்நீச்சல் தான். பொதுவாகவே சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மட்டுமே பிரபலமாகி வருவார்கள். ஆனால் இந்த நாடகத்தில் மட்டும் தான் இதில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் அதிக அளவில் ரீச் ஆகி வருகிறார்கள்.  முக்கியமாக இதில் அப்பத்தாவுடைய கேரக்டர் ரசிக்கும்படியாக அமைகிறது.

அந்த வகையில் அப்பத்தா, குணசேகரனை வைத்து விளையாடுவது தரமான சம்பவமாக இருக்கிறது. அந்த 40% ஷேர் என்ன ஆச்சு என்று குணசேகரன் கேட்க அதற்கு அப்பத்தா முதலில் ஆதிரையின் திருமணம் நடந்து முடியட்டும் அதற்கு அப்புறம் நான் சொத்து தருகிறேன் என்று கூறுகிறார். இதை அவ்வளவு ஈசியாக நம்பக்கூடியவரா நம்ம குணசேகரன். இல்லை அப்பத்தா முதலில் அந்த சொத்தை கொடு அதன் பிறகு கல்யாணத்தை வைக்கலாம் என்று கூறுகிறார்.

Also read: வெண்பா கன்னத்தை பதம் பார்த்த கண்ணம்மா.. செம அடி, ஒரே கதையை எப்படி தா உருட்ட முடியுதோ!

இப்படி இரண்டு பேருமே பிடிவாதம் பிடித்ததால் கடைசியில் அப்பத்தா ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை முதலில் நடத்தி, அதை பதிவு பண்ணலாம். அதன் பிறகு என் சொத்தை உனக்கு தருகிற மாதிரி நான் எழுதிக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டார். இந்த பதிலை எதிர்பார்க்காத குணசேகரன் வேறு வழி இல்லாமல் ஓகே சொல்லிவிட்டார்.

இதற்கு அடுத்த கட்டமாக எஸ் கே ஆர் வீட்டிற்கு முறைப்படி பேச குணசேகரன் மற்றும் ஜனனி ஆகியோர் செல்கிறார்கள். ஆனால் ஏற்கனவே சாருலதாவை வீட்டில் வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார். இப்பொழுது அவர் வீட்டிற்கே திருமணத்தைப் பற்றி பேசுவதற்கு போகிறார்கள். இன்னும் அங்கே என்னென்ன ட்விஸ்ட் எல்லாம் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

Also read: தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்

இதற்கிடையில் குணசேகரனின் அம்மா விசாலாட்சி க்கு மூட்டு வலி பிரச்சனை இருப்பதால் அவரை அழைத்து சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு கூட்டி வருகிறார். அங்கே எதிர்ச்சியாக ஜனனியின் அம்மா மற்றும் வசு அவர்களை சந்திக்கிறார்கள். பின்பு இவர்கள் அனைவரும் பேசிக்கொள்ளும் போது குணசேகரின் அம்மா, ஜனனி ரொம்ப நல்ல பொண்ணு அவளுடைய மனசுக்கு நல்லா இருப்பாள் என்று சொல்கிறார். இதை கேட்ட ஜனனியின் அம்மா, அப்புறம் எதற்கு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார் உங்க பையன் என்று கேட்கிறார்.

மேலும் குணசேகரன் எவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலையை பார்த்து வருகிறார் என்பது நன்றாகவே புரிகிறது. ஏனென்றால் ஒரு பக்கம் அப்பத்தா உடைய 40% ஷேர், அப்புறம் எஸ்கேஆர் இன் சொத்து, ஜான்சி ராணியின் சொத்து இது அனைத்தையுமே ஆட்டைய போடுவதற்கு சொந்த தங்கச்சியின் வாழ்க்கையை அடமானம் வைக்கிறார். ஆனால் அப்பத்தா வேற ஒரு பிளான் போட்டு வருகிறார். இதில் அப்பத்தாவின் சூழ்ச்சியில் குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார் என்று தெரிகிறது.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

Trending News