Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் கதைக்கு ஏற்ற கேரக்டர் அவரிடம் இல்லை என்பதால் தொடர்ந்து அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. அதனாலேயே முதல் பாகத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் வந்த எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் குணசேகரன் கேரக்டரை மொத்தமாக தூக்குவதற்கு ஜீவானந்தம் பிளான் பண்ணி விட்டார்.
அந்த வகையில் ஜெயிலில் இருக்கும் குணசேகரனை டம்மியாக வைத்துவிட்டு முக்கியமான வில்லனை வேறு ஒருவராக கொண்டு வரலாம் என்று நினைத்தார். அதன்படி வில்லன் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக கதிர் இருந்ததால் அப்படியே குணசேகரன் மாதிரி கேரக்டரை மாற்றி அமைக்கலாம் என்பதற்காக கதிரே வைத்து கச்சிதமாக பிளான் பண்ணி விட்டார்.
அந்த வகையில் ஜெயிலுக்குள் இருக்கும் குணசேகரன், கதிரை தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பமில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தார். அதனால் இப்பொழுது கதிர் மீது மொத்த சொத்தையும் எழுதி வைத்துவிட்டார். இனி கதிரின் ஆட்டம் தான் என்பதற்கு ஏற்ப குணசேகரன் சொத்துக்கள் அனைத்தையும் அவர் பெயர் எழுதி வைத்து விட்டதால் ஞானம் ஒட்டுமொத்த கோபத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே குணசேகரனிடம் இருந்து தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்க வேண்டும் என்ற நினைப்பில் ஞானம் இருந்தார். அதற்கு மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக அனைத்து சொத்துக்களையும் கதிருக்கு மட்டும் கொடுத்த நிலையில் இனி ஞானம் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் நொடிந்து போய்விட்டார்.
கதிரும் இதுதான் சான்ஸ் என்று பழைய குணசேகரன் மாதிரி வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை வெற்றியில் குங்குமம் என்று புதுசாக அவதரித்து விட்டார். இனி எல்லா சொத்துக்கும் சொந்தக்காரர் கதிர் தான் என்பதால் ஞானம் ஒவ்வொரு முறையும் சண்டை போடப்படுகிறார். இதனை பார்த்து ரேணுகாவும் ஜாடமாடையாக நந்தினியை குத்தி காட்டி பேச போகிறார்.
அத்துடன் ஒற்றுமையாக இருக்கும் மருமகளுக்கு இனி பிரச்சனை தான் என்பதற்கு ஏற்ப ரேணுகா மற்றும் நந்தினிக்கு இடையே விரிசல் வரப்போகிறது. இவர்களுடைய ஒற்றுமையை பிரித்து விட்டால் பெண்களின் சாம்ராஜ்யம் மொத்தமாக சரிந்து விடும் என்பதுதான் குணசேகரனின் பிளான். இருந்தாலும் கதிர், நந்தினியை யாரிடமும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் மொத்த பாசத்தையும் கொட்டும் விதமாக மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து தான் வருவார்.
அதிலும் நந்தினி அப்பா கதிரை தூண்டிவிட்டு குடும்பத்திற்கு எதிராக மாற்றப் போகிறார். இதனால் தர்ஷன் மொத்த குடும்பத்தையும் வெறுக்கும் அளவிற்கு மாற போகிறார். ஆனாலும் இனி தான் கதை சூடு பிடிக்க போகின்றது என்பதற்கு ஏற்ப கதிர், பழைய குணசேகரன் போல் மாஸ் காட்டப் போகிறார்.