திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெட்கம் கெட்டு திரியும் குணசேகரன்.. நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வீட்டிற்கு மாப்பிள்ளை விருந்துக்காக ஆதிரை கரிகாலன் வந்திருக்கிறார்கள். ஜான்சி ராணி இங்கே அனுப்பும்போதே இவர்களுக்கான முதல் இரவை அங்கே வைத்து நடத்தி முடித்து விடுங்கள் என்று தான் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

அதற்கு குணசேகரனும் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் வந்த பிறகு நடந்த குளறுபடிகளால் குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்கள் ரொம்பவே துணிச்சலுடன் எதையும் பண்ண மாட்டோம் என்று வெறும் ரசம் சாப்பாட்டை வைத்து விருந்தை முடித்து விடுகிறார். அடுத்து கரிகாலன் அவ்வப்போது எங்களுக்கு முதல் ராத்திரிக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று எல்லாரிடமும் கேட்டுக் கொண்டு வருகிறார்.

Also read: ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

இதற்கு ஜான்சி ராணியும் வந்து பேசியபோது குணசேகரனின் பொண்ணு தைரியமாக பேசி வெளிய அனுப்பி விடுகிறார். அடுத்தபடியாக இரவு நேரத்தில் அடுப்பாங்கரையில் மருமகள்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரிகாலன் அங்கே வந்து எனக்கு முதல் ராத்திரி ரூம் ரெடி பண்ணி கொடுங்க என்று வெட்கமே இல்லாமல் கேட்கிறார்.

அதற்கு ரேணுகா எப்ப பார்த்தாலும் உனக்கு அதே நினைப்பு தானா நாக்க தொங்கப் போட்டு அலைஞ்சுகிட்டு இருக்கிறாய் என்று சொல்கிறார். பிறகு கரிகாலன் கத்தி கூச்சல் இடுகிறார். அங்கே வந்த கதிர், ஆதிரையை வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறார். அப்பொழுது குணசேகரின் மகள், கரிகாலன் மற்றும் கதிரை அதட்டி வெளியே அனுப்பி விடுகிறார்.

Also read: நடுத்தெருவில் நிற்கும் ராதிகா கோபி.. சவாலில் ஜெயிக்கப் போகும் பாக்கியா

அடுத்ததாக ரேணுகா மற்றும் ஞானத்தின் பொண்ணு கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கப் போவதாக குணசேகரனிடம் சொல்கிறார். ஆனால் அதற்கு என் வீட்டு பொண்ணு அங்கே போய் படித்தால் எனக்கு மரியாதை கிடையாது. அவள் படிக்கிறாளோ இல்ல குட்டிச்சுவரா போறாளோ எனக்கு அது கவலை இல்லை. ஆனால் நான் பீஸ் கட்டி படிக்கிற ஸ்கூல்ல தான் அவள் படிக்கணும் இல்லை என்றால் நடக்கிறதே வேற என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் ரேணுகா இதெல்லாம் கண்டு கொள்ளாமல் கவர்ன்மென்ட் ஸ்கூலில் விசாரிப்பதற்கு மகளை கூட்டிட்டு போகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் பட்டம்மாள் விஷயம் என்ன நிலவரம் என்று ஜீவானந்தம் கௌதமுக்கு போன் பண்ணி விசாரிக்க சொல்கிறார். அதற்கு அவரும் நான் அங்கே போய் சென்று பார்த்துவிட்டு உங்களை நேரில் சந்திக்கிறேன் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் இந்த நாடகம் எதை நோக்கி பயணித்து வருகிறது என்பது புரியாத புதிதாக தான் இருக்கிறது.

Also read: இது என்னடா குணசேகரனுக்கு வந்த சோதனை.? துண்டக் காணும் துணிய காணோம்னு ஓடிப்போன ஜான்சி ராணி

Trending News