சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Ethirneechal : நம்ம ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி விட்டதே.. எதிர்நீச்சல் மருமகளால் விழி பிதுங்கிய குணசேகரன்

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் எதிர்பார்க்காத பல திருப்பங்களை இயக்குனர் அரங்கேற்றி வருகிறார். சில மாதங்களாகவே மந்தமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் இப்போது சூடு பிடித்த நிலையில் டிஆர்பி எகிறிகிறது.

அதாவது தர்ஷினிக்கு கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க குணசேகரன் முடிவெடுத்திருந்தார். ஆதிரைப்போல இவருக்கும் பிடிக்காத திருமணம் நடந்து விடுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் திருமண மண்டபத்தில் இருந்து தர்ஷினி வெளியேறி ஜீவானந்தம் இடம் பாதுகாப்பாக சென்றுவிட்டார்.

இந்நிலையில் குணசேகரன் மிகுந்த அவமானத்தால் மனம் உடைந்து போயிருக்கிறார். எப்போதும் வெள்ளை வேஷ்டி உடன் கம்பீரமாக சுற்றித்திரிந்த குணசேகரன் சாமியார் போல காவி உடை அணிந்து வீட்டுக்குள் வருகிறார். எதிர்நீச்சல் மருமகள்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கின்றனர்.

வீட்டை விட்டு கிளம்பும் மருமகள்கள்

நான் ஒன்னும் உங்க கிட்ட அனுமதி வாங்க காத்திருக்கல என்று கதிர் பேசுகிறார். மேலும் நந்தினி அப்பாவும் மருமகள்கள் வீட்டை விட்டு போவதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது கொந்தளிக்கும் ஞானம் குணசேகரனை போல தான் எங்களையும் எங்க அம்மா வளர்த்தாங்க.

எங்களுக்கும் இங்க சம உரிமை இருக்கு என்று கூறுகிறார். இத முதல்ல உங்க அம்மாகிட்ட கேளுங்க என்று ஞானத்தின் மனைவி கூறுகிறார். ஆனால் விசாலாட்சி என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் முழிக்கிறார். இனி தான் நான்கு மருமகள்களின் ஆட்டமும் தொடங்க இருக்கிறது.

தர்ஷினியின் கல்யாணத்தை நடத்த பல கணக்குகள் போட்டும், நம்ம ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி விட்டதே என்ற நிலைமையில் தான் குணசேகரன் இருக்கிறார். மேலும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாக இருக்கிறது.

Trending News