Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, தர்ஷினியை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அங்கே குணசேகரன் தர்ஷினியை பார்த்ததும் வழக்கம்போல் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். அதற்கெல்லாம் அசராத தர்ஷினி தெளிவான முடிவை எடுத்து குணசேகரன் முகத்தில் கரியை பூசி விட்டார்.
அதாவது குணசேகரன், அப்பா என்கிற முறையில் நான் உனக்கு எதுவுமே பண்ண மாட்டேன். நீயும் எந்த காரணத்தை கொண்டு என் பெயரை வெளியே சொல்லி விடாதே என்று கூறுகிறார். இதை கேட்ட தர்ஷினி அதைதான் நான் திருப்பி உங்களுக்கு சொல்கிறேன். நான் என்னுடைய இலட்சியத்தில் ஜெயித்து நின்ன பொழுது இவள் தான் என்னுடைய மகள் என்று சொல்லிராதீர்கள்.
குணசேகரனின் வாரிசு எடுக்கும் சபதம்
நான் இப்பொழுது தர்ஷினி ஈஸ்வரி என்ற முத்திரையில் தான் என்னுடைய அடுத்த கட்ட முன்னேற்றத்தை பயணிக்க போகிறேன் என்று குணசேகனுக்கு எந்த விதத்திலும் சலித்தது இல்லை என்று பேசிவிட்டார். பின்பு ஈஸ்வரிடம் தர்ஷினி, ஜீவானந்தத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்.
அவர் மீது உங்களுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதா? எத்தனை நாளைக்கு இப்படி தனியாக இருக்கப் போகிறீர்கள். இப்பொழுது எனக்கு நீங்கள் தான் முக்கியம் முதல் உரிமை. ஆனால் இதுவே கடைசி வரை இருக்குமா? என்னுடைய லட்சியம் இப்படியே போகுமா? என்று எனக்கு தெரியாது. அப்பொழுது என்னுடைய எண்ணங்கள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த நேரத்தில் நீங்கள் தனியாக யாரும் இல்லாமல் இருப்பதை என்னால் பார்க்க முடியாது. அதனால் ஊர் என்ன நினைக்கும் உலகம் என்ன நினைக்கும் என்று யோசிக்காமல் உங்களுக்கான ஒரு வாழ்க்கை துணையை தேடி அதில் சந்தோஷமாக வாழ பாருங்கள் என்று தர்ஷினி சொல்கிறார்.
இதற்கு ஈஸ்வரி எதுவும் சொல்ல முடியாமல் மௌனமாக சிரித்துக் கொள்கிறார். பிறகு தாராவின் காதுகுத்து பங்க்ஷன் முடிந்த பிறகு நாம் அனைவரும் உடனடியாக இந்த வீட்டை விட்டு கிளம்பி போய்விடலாம் என்று சொல்கிறார். அதற்கான யோசனையையும் வைத்திருக்கிறார். அதாவது மொத்த சொத்தும் கையில இருக்கு என்ற ஆணவத்தில் தான் குணசேகரன் இந்த ஆட்டம் ஆடுகிறார்.
அதனால் அதை முதலில் நாம் உடைக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஐடியா கொடுக்கிறார். அதன்படி கோர்ட்டில் சொத்து கேட்டு கேஸ் போடலாம். இனி அவருக்கு நாம் கொடுக்கும் ஒவ்வொரு டார்ச்சரால் மற்றவர்கள் பக்கம் வராத அளவிற்கு அவருக்கு மிகப்பெரிய அடி கொடுக்க வேண்டும் என்று தர்ஷினி ஸ்கெட்ச் போடுகிறார்.
அப்பா எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும் என்று சும்மாவா சொன்னாங்க. அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரன் பொண்ணு என்கிற மாதிரி புத்தியை கத்தி போல் தீட்டி வருகிறார்.