Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், புலி பதுங்குறது பாய்றதுக்கு தான் என்பதற்கு ஏற்ப குணசேகரன் பதுங்கி இருந்து ஒவ்வொருவரையும் கவுக்க போகிறார். அதற்கு குணசேகனுக்கு அடிமையாக சிக்கியது சக்தி. ஏனென்றால் குணசேகரன் முதலில் அவருடைய வீட்டிற்கு போக வேண்டும். அது சக்தியை தவிர வேற யார் நினைத்தாலும் முடியாது.
அதற்காக சக்தியை வரவழைத்து அன்பாக பேசி சென்டிமென்ட் டிராமாவை போட்டு கஷ்டப்பட்டு கட்டின வீட்டில் கூட கால் எடுத்து வைக்க முடியாமல் பிச்சைக்காரன் போல் இருக்கிறேன் என்பதை சக்தி மனதில் உரைக்கும் படி சொல்லி பாசத்தை காட்டிவிட்டார். அத்துடன் என்னை எப்படியாவது அந்த வீட்டிற்கு கூட்டிட்டு போய் சேர்த்து விடு, அம்மா கையால் சாப்பிட்டு எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்பது எனக்கு ஆசையாக இருக்கிறது.
ஏனென்றால் எனக்கு இரண்டு வாரம் மட்டும் தான் பரோல் கிடைத்திருக்கிறது என்று சொல்லி சக்தி மூளையை சலவை செய்துவிட்டார் குணசேகரன். கதிர் அடாவடியாக ஆட தான் லாய்க்கு, அவனால் ஒன்னும் பண்ண முடியாது. ஞானம் சும்மா வெத்து வெட்டு அவனாலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதை புரிந்து கொண்ட குணசேகரன், சக்தியை வைத்து காய் நகர்த்தி விட்டார்.
குணசேகரனின் சென்டிமென்ட் டிராமாவுக்கு உருகிய சக்தியும் வீட்டிற்கு வந்து நான்கு பெண்களிடம் குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டே அவரை வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அவருடைய வீட்டிற்கு அவர் வரவேண்டும், அவர் செய்த தவறுக்கு தான் தண்டனை வாங்கி கொடுத்து விட்டீங்க. இப்பொழுது பரோலில் வந்திருக்கும் பொழுது அவரால் உங்களை எதுவும் பண்ண முடியாது.
அதனால் அவர் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய வீட்டில் இருந்துட்டு போகட்டும் என்று சொல்லி நான்கு பெண்களிடம் சண்டை போடுகிறார். அதன்படி நான்கு பெண்களும், சாறுபாலாவை பார்த்து குணசேகரன் வீட்டுக்குள் வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி கோர்ட்டில் சொல்லி விடுகிறார்கள். அந்த வகையில் குணசேகரன், திட்டத்தின் படி மறுபடியும் கெத்தாக அவருடைய வீட்டிற்குள் நுழையப் போகிறார்.
இதன் பிறகு தான் ஆட்டமே இருக்கிறது என்பதற்கு ஏற்ப வீட்டுக்குள் நுழைந்த குணசேகரன், நான்கு பெண்களையும் ஆட்டிப் படைக்கப் போகிறார். இன்னொரு பக்கம் கதிர், மாமனார் உடன் திட்டம் போட்டு குணசேகரை கவுப்பதற்கு தயாராகி விட்டார். ஆக மொத்தத்தில் இவங்க போட்ட திட்டத்தில் இந்த நான்கு பெண்களும் தான் சிக்கி தவிக்கப் போகிறார்கள். மறுபடியும் முதலில் இருந்தா என்பதற்கு ஏற்ப குணசேகரன் அராஜகம் பண்ண அதற்கு கதிர் ஒத்து ஊத, சக்தி தலையாட்டி பொம்மையாக வேடிக்கை பார்க்க போகிறார்.