Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் கதிர் கேரக்டரை பார்க்கும் பொழுது இவ்வளவு கொடூரமாக இருக்காங்களே என்று தோன்றியது. ஆனால் இவர்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கொடூர அரக்கனாக மாறிய தர்ஷன் குணசேகரனின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார். பார்க்கவியை துரத்தி துரத்தி காதலித்து விட்டு அன்புக்கரசிக்கு தாலி கட்டுவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார்.
இதற்கு காரணம் பணம் தான், பணத்தை கொடுத்தால் நான் என்ன வேணாலும் செய்வேன் என்று நிலைமைக்கு தர்ஷன் வந்து விட்டார். அதனால் தான் கண்ணுமுன்னு தெரியாமல் ஓவராக ஆட்டம் ஆடுகிறார். இவரின் ஆட்டத்திற்கு கதிரும் ஒத்து ஊதுகிறார். தற்போது அறிவுக்கரசியும் கூட இருப்பதால் நம்மளை யாரும் எதுவும் பண்ண முடியாது என்ற தெனாவட்டில் தர்ஷன் அடங்காமல் அலைகிறார்.
ஆனால் தர்ஷினிக்கு ஒரு பிரச்சனை என்றதும் அதற்கு குரல் கொடுத்து நியாயம் பெற வேண்டும் என்று குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிய ஈஸ்வரி, பார்கவியும் தர்ஷனால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்ததும் பார்கவி மூலம் தர்ஷனுக்கு எதிராக புகார் கொடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்து விட்டார். ஆனால் தர்ஷனின் சுயரூபம் தெரிந்த பார்க்கவி, நீயும் வேண்டும் உன் காதலும் வேண்டாம் என்று எல்லாத்தையும் தூக்கி எறிந்து போய்விட்டார்.
இருந்தாலும் பார்க்கவியை சந்தித்து தர்ஷன் பண்ணும் ஆட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜனனி ஈஸ்வரி முடிவு பண்ணி விட்டார்கள். அதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து பார்கவி வீட்டிற்கு சென்று பேசப் போகிறார்கள். இதற்கிடையில் தர்ஷன் பார்கவி விஷயம் அறிவுக்கரசிக்கு தெரிந்த நிலையில் பார்கவி வீட்டில் இருப்பவர்களை மிரட்டி தர்ஷன் வழிக்கு வராதபடி ஊரை விட்டு போக வேண்டும் என்று அடியாட்களை வைத்து மிரட்ட அனுப்பி விட்டார்கள்.
அப்பொழுது பார்க்கவி வீட்டில் ஜனனி ஈஸ்வரி இருக்கும் பட்சத்தில் அடியாட்கள் உள்ளே நுழைந்து அடாவடித்தனம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். தர்ஷன் வேண்டாம் என்று ஒதுங்கிய பார்கவி இவ்வளவு தூரம் போன தர்ஷனுக்கு சரியான பாடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி ஈஸ்வரிக்கு போன் பண்ணி நான் தர்ஷனுக்கு எதிராக புகார் கொடுக்கிறேன் என்று சம்மதம் கொடுத்து விடுகிறார்.
அந்த வகையில் இந்த பார்கவி வைத்து தர்ஷனுக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும். அதே நேரத்தில் அறிவுக்கரசி நினைக்கும் படி கல்யாணத்தை நிறுத்தி விடலாம், குணசேகரனையும் வெளியே வராதபடி தடுத்துவிடலாம் என்று சூழ்ச்சி பண்ணி ஜனனி அனைவரையும் காலி பண்ண போகிறார். அந்த வகையில் இந்த விஷயத்தில் ஜனனிக்கு சப்போர்ட்டாக ஈஸ்வரி ரேணுகா மற்றும் நந்தினி இருந்து இதில் வெற்றியை பார்க்கப் போகிறார்கள்.