DeAr Movie Review: வெற்றியோ தோல்வியோ ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜிவி பிரகாசுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த ஜோடி தற்போது டியர் படத்தில் இணைந்துள்ளனர்.
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் காளி வெங்கட், தலைவாசல் விஜய், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியாகி உள்ளது. இதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.
டிவி சேனலில் வேலை பார்த்து வரும் ஜிவி பிரகாஷுக்கு மிகப்பெரும் லட்சியம் இருக்கிறது. அவருக்கும் குன்னூரில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது.
சிறு சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து விழித்து விடுபவர் ஜிவி பிரகாஷ். ஆனால் குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கிறது. அதுவே இவர்களுக்குள் பிரச்சனையாக முடிகிறது.
குறட்டையால் விவாகரத்து கேட்கும் ஜோடி
மனைவியின் குறட்டை ஜிவி பிரகாஷின் லட்சியத்தை சின்னாபின்னம் ஆக்கி விடுகிறது. இதனால் அவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது? பிரிந்த ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. கடந்த வருடம் வெளிவந்த குட் நைட் படத்தின் சாயல் அப்படியே இருக்கிறது.
இருந்தாலும் ஒரே மாதிரி படங்கள் வெளிவருவது இப்போதைய ட்ரெண்ட் என்ற லாஜிக்கை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனையை காட்டுவதில் எமோஷனல் குறைபாடு இருக்கிறது. அதிலும் ஜிவி பிரகாஷின் ஒரே மாதிரியான நடிப்பு கொஞ்சமும் ஒட்டவில்லை.
கோபப்பட வேண்டிய இடத்தில் கூட சாதாரணமாக கடந்து செல்வது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு.
வழக்கமான அவருடைய அர்ப்பணிப்பு இதில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக காளி வெங்கட் கதாபாத்திரமும் ரசிக்க வைத்துள்ளது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி சில காட்சிகள் தேவையற்றது என்ற உணர்வை கொடுக்கிறது. அதனால் தியேட்டரில் படத்தை பார்ப்பதற்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். இருந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்காக தாராளமாக பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5