
GV Prakash: கடந்த வருடம் அடுத்தடுத்து பிரபலங்களின் பிரிவு செய்தி வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் பள்ளி பருவத்திலிருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. இரண்டு தரப்பினர் மீதும் குற்றம் சொல்லி செய்திகளும் வெளியானது.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்தனர். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடத்திய இசைக்கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாடினார்.
விவாகரத்து என்ன ஆச்சு.?
அப்போதே இருவரும் விவாகரத்து பற்றி யோசிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜிவி பிரகாஷ் சைந்தவி நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்துக்கான மனு கொடுத்துள்ளனர்.
இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னொரு சம்பவம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது இவர்களுடைய வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.
அதை அடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த இருவரும் ஒரே காரில் சென்றது தான் ஹைலைட். இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.
அப்படி என்றால் இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கலாமே என ஒரு தரப்பினர் வாதம் செய்து வருகின்றனர்.
ஆனால் இரு தரப்பும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்துள்ளனர். இதற்குப் பின்னால் வலுவான காரணம் இருக்கும் என ஆதரவு கருத்துக்களும் எழுந்துள்ளது.