கடல் சார்ந்த பேண்டஸி, நடுக்கடலும், மர்மங்களும்.. நம்ம ஊர் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’, ஜிவி-யின் கிங்ஸ்டன் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Kingston
Kingston

Kingston Trailer: ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடித்திருக்கும் கிங்ஸ்டன் படத்தில் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருக்கிறது.

படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆனால் இந்த படத்தின் டிரைலர், எப்போ இந்த படம் ரிலீஸ் ஆகும் பார்க்கலாம் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டிருக்கிறது.

இதற்கு காரணம் இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேண்டஸி அட்வென்ச்சர் படம் இது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கடல் ஓர கிராமம் ரொம்பவும் சபிக்கப்பட்ட கிராமமாக இருக்கிறது.

அங்கே நிறைய மர்மங்கள் நடக்கிறது. ஹீரோ ஜிவி பிரகாஷ் கடலில் விழுந்து சாவதற்கு, ஊருக்காக சாகலாம் என்று முடிவு எடுக்கிறார். தன்னுடைய நண்பர்கள் மற்றும் திவ்யபாரதியுடன் கடலில் இருக்கும் மர்மத்தை நோக்கி பயணிக்கிறார்.

படத்தின் டிரைலரில் ஆரம்பத்தில் கடலில் எதுவுமே இல்லாதது போல் காட்டப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் போகும் படகில் அகோரமான ஏலியன் போன்ற உருவங்கள் உள்ளே இறங்கி இவர்களை தாக்குகிறது.

இந்த மர்ம உருவங்களுடன் மோதி ஜிவி பிரகாஷ் தன்னையும் தன்னுடைய நண்பர்களையும் காப்பாற்றுகிறாரா என்பதுதான் படத்தின் கதை.

இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கும் இந்த படத்தின் VFX காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்த படம் வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner