புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திறமை இருந்தும் தலைக்கனத்தால் சீரழியும் இளம் நடிகை.. ஜிவி பிரகாஷ் உடன் காதல் காட்சியில் பின்னிய ஹீரோயின்

GV Prakash heroine abarnathi, who despite his talent is spoiled by stubbornness: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்கள் ஒன்று இரண்டு படங்களுக்குப் பின் நிலைத்து நிற்பது என்பது கடினமாகவே உள்ளது. 

ஒரு சில நடிகைகளை தவிர இப்போது வரும் ஹீரோயின்கள் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே காணாமல் போகும் நிலைமையும் நிலவத்தான் செய்கிறது.

ஆனால் சில நடிகைகள் நல்ல திறமை இருந்தும் தங்களது ஆட்டிடியூட் சரியில்லாத காரணத்தினால் வரும் வாய்ப்புகளை இழக்கின்றனரோ? என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஆர்யாவின் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர்தான் நடிகை அபர்ணதி.

இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு வர முடியாமல் வெற்றி பெறாத போதும் ஆர்யாவை பற்றி கேட்டதற்கு அவர் கல்யாணம் முடிந்த அங்கிள் சென்று சொல்லி கலாய்த்தும் இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பின்பு அபர்ணதி ஜிவி பிரகாஷ் குமார் உடன் 2021 ஆம் ஆண்டு ஜெயில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் ஜிவி பிரகாஷ் குமார் உடனான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

பின் கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் அபர்ணதி.

எந்த ஒரு கதாபாத்திரமானாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு முழு ஒத்துழைப்புடன் கேரக்டராக வாழ்ந்து விடும் நல்ல திறமையான நடிகை தான் அபர்னதி.

ஒரு சில படங்கள் ஹிட் ஆனதும் தலைவிக்கு  தலையில் கொஞ்சம் கணம் ஏறி விட்டதோ என்னவோ, படக்குழுவினருக்கு சில கடுமையான கண்டிஷன்களை போட்டு வருகிறாராம்.

ஓவர் ஆட்டிடியூடால் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நடிகை அபர்ணதி

கேரவன் சரியில்லை, அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என ஓவராக பேசி அலும்பு பண்ணுவது மட்டுமல்லாமல் வெயில் அதிகமாக இருக்கிறது என்று காரில் உட்கார்ந்து கொண்டு படக்குழுவினர்கள் அனைவரையும் வெகு நேரம் காக்க வைத்து வருகிறாராம்.

இதை பார்த்து சில முன்னணி நடிகர்கள் முதல் பட குழுவினர்கள் அனைவரும் காண்டாகி உள்ளனராம். 

தற்போது அபர்ணதி ஹச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீ வெற்றி அவர்களின் இயக்கத்தில் “நாற்கர போர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Trending News