புதன்கிழமை, ஜனவரி 8, 2025

Kalvan Movie Review – ஜிவி பிரகாஷ், பாரதிராஜா கூட்டணி எப்படி இருக்கு?கள்வன் முழு விமர்சனம்

GV Prakash : ஜிவி பிரகாஷின் படங்கள் மாதத்திற்கு ஒன்று வெளியாகி விடுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ரெபல் படம் வெளியாகி இருந்தது. இது இந்த ஏப்ரல் மாதத்தில் ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள் வெளியாகிறது.

அந்த வகையில் இன்று ஜிவி பிரகாஷின் கள்வன் படம் வெளியாகி உள்ள நிலையில் ஏப்ரல் 11 டியர் படம் வெளியாகிறது. ஒளிப்பதிவாளர் பிவி சங்கர் இயக்குனராக கள்வன் படத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ், இவானா, பாரதிராஜா, விஜய் டிவி தீனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சின்ன சின்னதாக திருட்டு தொழில் செய்து வருகிறார்கள் ஜி வி பிரகாஷ் மற்றும் தீனா.

ஜிவி பிரகாஷ், இவானா இடையே காதல்

இவ்வாறு பொறுப்பில்லாமல் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு இவானா மீது காதல் ஏற்படுகிறது. அந்தக் காதலினால் ஜி.வி பிரகாஷ் இடையே ஏற்படும் மாற்றம் தான் கள்வன் படத்தின் கதை. மேலும் சத்தியமங்கலம் என்ற கிராமத்தில் யானை மிதித்த பலர் இருக்கிறார்கள்.

இதைச் சுற்றியும் கள்வன் படத்தின் கதை நகர்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். படத்தில் எல்லாம் பக்காவாக இருந்தாலும் திரைக்கதையில் இயக்குனர் சொதப்பிவிட்டார். கதையின் மையக்கருத்தை ஆழமாக வைத்திருந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்திருக்கும்.

பாரதிராஜா படத்திற்கு தூணாக இருந்துள்ளார். அவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதேபோல் பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக நடிகை இவானாவும் சூப்பராக நடித்துள்ளார். கதையில் கவனம் செலுத்தி இருந்தால் கள்வன் வென்று இருப்பான்.

சினிமாபேட்டை ரேட்டிங் :2/5

Trending News