Music Director Gv Prakash: தமிழ் சினிமாவில் நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் கலக்கி கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் என்னதான் நடிகராக தற்போது நடித்தாலும், இவருடைய ரசிகர்கள் விரும்பி எதிர்பார்ப்பது இவருடைய இசையை மட்டுமே. அதனாலேயே தொடர்ந்து பல படங்களுக்கு தரமான பாடல்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிஸியாக அதிகமான படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார். இந்த சமயத்தில் இவர் இசையமைக்கும் ஒரு படத்துக்கு இவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்கள். அதற்கு பதிலாக பல படங்களுக்கு இசையால் மட்டுமே வெற்றியை கொடுத்து வந்த இசையமைப்பாளரை கூப்பிட்டு இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை இசைஞானி இளையராஜா.
Also read: மொத்தத்தில் ரூட்டை போட்டுக் கொடுத்த விஜய்.. ஜிவி பிரகாஷ், ப்ரியா பவானி சங்கர் போடும் ஆட்டம்
அத்துடன் பல வருடங்களுக்குப் பிறகு இணையும் மெகா கூட்டணி தற்போது இப்படத்தின் மூலம் மீண்டும் இணைய இருக்கிறார்கள். அதாவது மனோஜ் பாரதிராஜா இயக்க இருக்கும் “மார்கழி திங்கள்” படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் முதலில் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கப் போவதாக இருந்தது. ஆனால் மனோஜ் மற்றும் பாரதிராஜா கூட்டணி இருக்கும் பொழுது கண்டிப்பாக அதில் இளையராஜா இல்லாமல் எப்படி சாத்தியம் ஆகும். அதனால் இளையராஜாவின் இசையில் இப்படம் தொடங்க இருக்கிறது.
Also read: யோசிக்காமல் ஜிவி பிரகாஷ் செய்த விஷயம்.. படத்திலிருந்து தூக்க பிளான் போடும் வெற்றிமாறன்
இது சம்பந்தமாக தற்போது இளையராஜா இசையமைப்பதை, பாரதிராஜா அவருடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். அதில் என் உயிர் தோழன் இளையராஜா உடன் இணைவது எனக்கு பெருமை என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை அடுத்து பாரதிராஜா மற்றும் மகன் மனோஜ் இளையராஜாவை நேரில் சந்தித்து அவர்களுடைய அன்பை பகிர்ந்து வந்திருக்கிறார்கள்.
முக்கியமாக பாரதிராஜா இயக்கிய பெரும்பாலான தமிழ் படங்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்திருக்கிறார். ஆனால் தற்போது முதல்முறையாக பாரதிராஜா நடிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒரு படத்தில் இரண்டு ராஜாக்கள் சேர்வது மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
Also read: அனிருத்தை ஓரம்கட்ட வரும் ஜிவி பிரகாஷ்.. அடுத்தடுத்த படவாய்ப்பால் எடுத்த முக்கிய முடிவு