செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

நட்பு வேற, தொழில் வேற.. ஜிவியிடம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்து கொண்ட தனுஷ், மேடையிலேயே போட்டு உடைத்த சம்பவம்!

GV Prakash: நட்பு என்பதை தாண்டி தொழில் என்று வந்துவிட்டால் எல்லா விஷயத்திலும் கரெக்டாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

தனுஷ் அதை மிஸ் பண்ணியதால் மேடையிலேயே அவரை பங்கமாக போட்டுக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

யுவன் சங்கர் ராஜாவிற்கு பிறகு தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷுக்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இடையில் இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக சேர்ந்து பணி புரியாமல் இருந்தார்கள்.

ஓவர் அட்வான்டேஜ் எடுத்து கொண்ட தனுஷ்,

அந்த கேப்பில் தனுஷ் படம் என்றாலே அனிருத் தான் என்று சொல்லும் அளவுக்கு தனுஷ் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதன் பின்னர் வெற்றிமாறன் அசுரன் படம் மூலம் பிறந்திருந்த நண்பர்களை ஒன்று சேர்த்தார்.

தற்போது தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருக்கிறார்.

இதுவரை இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ் அனிருத்தை மறைமுகமாக கிண்டல் அடித்திருந்தார்.

அதாவது ஜெயிலர் படம் வெற்றி பெற்ற போது சம்பளத்தை தாண்டி அந்த படத்தில் பணிபுரிந்த எல்லோருக்கும் தயாரிப்பு நிறுவனம் பரிசு கொடுத்தது.

அதே மாதிரி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பெரிய அளவில் வெற்றி பெறும். இதே போல பரிசு இந்த தயாரிப்பு நிறுவனமும் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதனால் தான் சம்பளம் கூட வாங்காமல் வேலை செய்து இருக்கிறேன் என என் நாசுக்காக பேசி இருக்கிறார்.

Trending News