வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

GV Prakash: ஜிவி பிரகாஷ் மெட்டு போட்டு சைந்தவி உயிர் கொடுத்த சூப்பரான 6 பாடல்கள்.. 90ஸ் கிட்ஸுகள் கொண்டாடிய ஜோடி

GV Prakash: ஜிவி பிரகாஷ் மெட்டு போட்டு சைந்தவி உயிர் கொடுத்த சூப்பரான 6 பாடல்கள்.. 90ஸ் கிட்ஸுகள் கொண்டாடிய ஜோடிவாழ்ந்தா இவங்கள மாதிரி தான் வாழனும்னு 90 கிட்ஸ்களுக்கு என்று ஃபேவரட் ஜோடிகள் லிஸ்ட் இருக்கிறது. அதில் முக்கியமான இடத்தில் இருந்தவர்கள் தான் ஜிவி பிரகாஷ் சைந்தவி. இசையும் பாட்டு ஒன்றாக கலந்து பதினோரு ஆண்டுகள் ஆன நிலையில் மன நிம்மதிக்காக இருவரும் பிரிகிறோம் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவி பாடிய எத்தனையோ பாடல்கள் நம் மனதுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. காலப்போக்கில் இவர்கள் இருவரும் இணைந்து இருப்பதே நிம்மதி இல்லை என நினைத்து இந்த முடிவை எடுத்து இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது.

காதலர்கள், கணவன் மனைவி என்பதை தாண்டி ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவி நிறைய நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். அதில் முக்கியமான ஆறு பாடல்களைப் பற்றி பார்க்கலாம்.

பிறை தேடும் இரவிலே: செல்வராகவனின் படங்களில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஒவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையையும் எடுத்துச் சொன்ன படம் மயக்கம் என்ன. இதில் ‘பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறாய் உயிரே’ பாட்டை சைந்தவி பாடி இருப்பார். இந்த பாடல் முழுக்க தன்னுடைய காதல் கணவனுக்காக மனைவி என்னவெல்லாம் விட்டுக் கொடுத்து வாழ்கிறார் என்ற காற்று அமைப்புகள் தான் இருக்கும்.’ என் ஆயுள் ரேகை நீயடி, என் ஆணிவேரடி’ என தன்னுடைய குரலையும் இந்த பாடலில் பதிவு செய்திருப்பார் ஜீவி பிரகாஷ்.

எள்ளு வய பூக்கலையே: ஜிவி பிரகாஷ் ஹீரோ ஆனதற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கொடுத்த தரமான பாடல்கள் அசுரன் படத்தில் வந்தன. இதில் சைந்தவி பாடிய எள்ளு வய பூக்களையே பாடல் இன்றுவரை எல்லோரையும் கலங்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. மகனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத தாய் பாடுவது போல் இந்த பாடல் அமைந்திருக்கும்.

கையிலே ஆகாசம்: ஜிவி பிரகாஷ் இசையில் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சூர்யா நடித்த சூரரை போற்று. இந்த படத்தில் தீ பாடிய காட்டுப் பயலே பாடல் ஒருவகையான ஹிட் என்றால், சைந்தவி பாடிய கையில் ஆகாசமாக வேறு வகையான கெட்டது. எந்த மாதிரியான சூழலும் இந்த பாடல் பொருந்தும்.’ கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா என்னும் பாடல் வரிகள் மனதை நெருடுவதாக இருக்கும்.

உன்னாலே: அழகான ஒரு காதல், அதற்கு பிறகு சுமூகமான ஒரு திருமணம், தேவதை போல் ஒரு குழந்தை இப்படி ஒரு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டான பாட்டு என்றால் அது உன்னாலே என் ஜீவன் பாடல் தான். சமந்தா மற்றும் விஜய் கெமிஸ்ட்ரியில் பாடல் பட்டையை கிளப்பி இருக்கும். இந்த இந்தப் பாட்டிற்கு சைந்தவியின் குரல் தான் உயிரோட்டமாக அமைந்திருக்கும்.

யாரோ இவன்: நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் தான் உதயம் nh4. இந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் சூப்பர் சூப்பர் ஹிட். யாரோ இவன் என்ற பாடலை இந்த படத்திற்காக சைந்தவி பாடி இருப்பார். ஒரு காலகட்டத்தில் இந்த பாட்டை விரும்பாத பெண் ரசிகைகளே இல்லை என்று சொல்லலாம்.

என்னாச்சு ஏதாச்சு: ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் ஓரளவுக்கு இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருந்தது. படம் முழுக்க ஏ கண்டன்ட் காட்சிகள் தான் இடம் பெற்றிருக்கும். இருந்தாலும் என்னாச்சு ஏதாச்சு பாடல் இளைஞர்களின் தேசிய கீதம் ஆகவே இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News