Kingston Movie Review: இசையமைப்பாளர் நடிகர் என்பதைத் தாண்டி 25 வது படம் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார் ஜிவி பிரகாஷ். கமல் பிரகாஷ் இயக்கத்தில் திவ்யா பாரதி, சேத்தன் என பலர் நடித்து இருக்கும் கிங்ஸ்டன் இன்று வெளியாகி உள்ளது.
அமானுஷ்யம் ஃபேண்டஸி திரில்லர் என டிரைலரை பார்க்கும் போதே ஒரு ஆர்வம் ரசிகர்களுக்கு இருந்தது. அதேபோல் பிரமோஷனும் ஜோராக நடந்தது.
இப்படி கொடுத்த அலப்பறைக்கு இப்படம் வொர்த்தா படம் பார்க்க வந்தவர்களை மிரட்டியதா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
கதை கரு
மீனவ கிராமத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். அந்த ஊரில் இருக்கும் மக்கள் அனைவரும் கடலுக்கு செல்லாமல் கிடைத்த வேலையை செய்து பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.
அதற்கு காரணம் 1982ல் இறந்த ஒருவரின் ஆத்மா மீன்பிடிக்க செல்பவர்களை பழிவாங்குவதாக நம்பப்படுகிறது. ஏனென்றால் கடலுக்கு செல்பவர்கள் அனைவரும் பிணமாக தான் கரை ஒதுங்குகின்றனர்.
அதேபோல் இளம் பெண்களும் மாயமாகி மறுநாள் சடலமாக மீட்கப்படுகின்றனர். இதனால் யாரும் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதில்லை.
ஆனால் ஜிவி பிரகாஷின் காதலி திவ்யா பாரதி கடத்தப்படுகிறார். அவரை தேடிச் செல்லும் ஹீரோ கடலில் நடக்கும் அமானுஷ்யத்தை கண்டறிகிறார்.
அத்துடன் ஒரு பெரிய உண்மை அவருக்கு தெரிய வருகிறது. தன் காதலியை அவர் மீட்டாரா? உண்மையில் கடலில் இருப்பது அமானுஷ்யம் தானா?
ஆத்மாக்கள் பழிவாங்குகிறதா? மாயமான பெண்களுக்கு என்ன நடந்தது? என பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படம்.
நிறை குறைகள்
கதை வித்தியாசமாக இருந்தாலும் திரைகதையில் அந்த உணர்வை கொண்டுவர தவறி இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் சலிப்பு தட்டுகிறது. அதனால் அமானுஷ்யத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு பயம் வரவில்லை.
இருந்தாலும் பயமுறுத்த முயற்சி செய்திருக்கின்றனர். மேலும் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
நடிப்பை பொறுத்தவரையில் ஜிவி பிரகாஷ் மெருகேறி இருக்கிறார். ஹீரோயினுக்கும் சிறிது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தவிர்த்து பின்னணி இசை ஓவர் டோஸாகி இருக்கிறது.
பாடல்களும் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை. இருந்தாலும் படம் ஒருமுறை பார்க்கும் அளவில் இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5