Rebel Twitter Review: நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மமிதா பைஜூ நடித்துள்ள படம் தான் ரெபல். இன்று வேறு எந்த படங்களும் போட்டிக்கு வராத நிலையில் களம் இறங்கியுள்ள இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காண்போம்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தமிழில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவியது. இருந்தாலும் முழு நம்பிக்கையோடு உண்மை சம்பவத்தை கையில் எடுத்து களத்தில் குதித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

அதன்படி தமிழனின் புரட்சியாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் கல்லூரி படிப்புக்காக செல்லும் ஜிவி பிரகாஷ் சில அவமானங்களை சந்திக்கிறார்.

அதை எதிர்த்து போராடும் மாணவராக அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அதேபோல் திரை கதையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
தமிழனாக போராடும் ஜிவி பிரகாஷ்
முதல் பாதி ஆவரேஜ் ஆக சென்ற நிலையில் இரண்டாம் பாதியில் அரசியல் கலந்து விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அதிலும் பின்னணி இசை மற்றும் கேமரா கோணம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.

80 காலகட்ட சம்பவமாக வரும் இக்கதை வெளி மாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்களின் நிலையை அப்பட்டமாக காட்டுகிறது. அந்த கேரக்டரில் ஜிவி பிரகாஷ் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

அவருடைய நடிப்பில் ஒரு முதிர்வும் தெரிகிறது. அடுத்ததாக ஹீரோயின் வரும் காட்சிகளும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.
இப்படி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இதன் மூலம் ஜிவி பிரகாஷ் வசூலிலும் கெத்து காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.