திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் மேல் கடுப்பில் இருக்கும் எச் வினோத்.. அடுத்தடுத்து வரும் பிரச்சனை

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் உடன் அஜித் கூட்டணி போட்டிருக்கும் படம் ஏகே 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார்.

ஆரம்பத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. முதலில் அஜித் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் மாற்றம் சொல்லி உள்ளதால் அதற்கான வேலையில் ஹெச் வினோத் இறங்கியிருந்தார்.

Also Read :ஏகே 61 அஜித் போட்ட முக்கியமான கண்டிஷன்.. தலையை பிச்சுக் கொண்டு திரியும் எச் வினோத்

தற்போது படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. அஜித் மட்டும் சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தால் இந்நேரம் ஏகே 61 படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து இருக்கும்.

அடுத்ததாக வினோத் நவம்பர் மாதத்திலிருந்து விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் தொடங்க முடிவெடுத்திருந்தார். ஆனால் அஜித்தினால் தற்போது ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் வினோத் திணறி வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது விஜய்சேதுபதியின் படத்தை தொடங்கலாம் என்று வினோத் முடிவெடுத்த தயாரிப்பாளரிடம் சென்றுள்ளார்.

Also Read :விஜய்சேதுபதி அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. இப்பவும் பீல்ட் அவுட் ஆகாததற்கு இதான் காரணம்

இந்நிலையில் ஏகே 61 படத்தை முடித்த பிறகு விஜய் சேதுபதி படத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் கூறிவிட்டாராம்.ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு படத்தின் வேலைகள் நடந்தால் பட்ஜெட் அதிகமாகும் என்ற தயாரிப்பாளர் இப்படி சொல்லி உள்ளாராம்.

ஆனால் அஜித்தும் இப்போதைக்கு படப்பிடிப்புக்கு வருவதாக தெரியவில்லை. இதனால் புதிய படம் தொடங்க முடியாமல் வினோத் திண்டாடி வருகிறார். மேலும் அஜித்தால் தான் புதிய படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்று அவர்மீது உச்சகட்ட கடுப்பில் உள்ளாராம் வினோத்.

Also Read :ரகசியமாக வைக்கப்பட்ட ஏகே 61 பட டைட்டில்.. இந்த ரெண்டில் ஒன்றை லாக் செய்யும் வினோத்

Trending News